எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த உலகம் எவ்வளவு பகட்டானது! புகழ் எவ்வளவு போதை...

இந்த உலகம் எவ்வளவு பகட்டானது! புகழ் எவ்வளவு போதை தரக்கூடியது! தன்னை நான்கு பேருக்கு தெரிந்திருக்கிறது என்பது எவ்வளவு திமிர் தனத்தை எம்மில் விதைத்துச் செல்கிறது! இந்த அற்ப புகழுக்காக எதை எதை எல்லாம் இழக்கவும், யாரை எல்லாமோ பகைக்கவும் நாட்டம் கொள்கிறோம். நாக்கு நரம்பிழந்து, சிந்தை தரிகெட்டு, முற்றாக கட்டிழந்து அலைகிறோம். சிலர் ஆதரிக்க, பலரும் எதிர்க்க, சுதந்திரம் என்பதன் அளவும் தெரிவதில்லை, ஆழமும் புரிவதில்லை.

ஒருநாள், படைத்தவன் நாட்டம் கொண்டால், நாக்கு சுண்டி இழுத்துக்கொள்ளும். ஒரு கையும் ஒருகாலும் கோணலாகிப் போகும். வீணீர் வடிய இழுத்து இழுத்து நடப்பது அவ்வளவொன்றும் இலகுவானதல்ல. இங்கே நிறுத்தி, நினைவுறுத்துவோம்; ஆண்டவனின் மிகப் பெருங் கருணை இந்த ஆரோக்கியம். அதன் பொருட்டு, அவனைத் தொழுவதும், ஓதி ஒழுகுவதும் நன்றி உடையவனாய் இருத்தலின் ஒரு பகுதியே.
அன்றியும், அவனது கட்டளைகளின் மீதான கேலியும், புறக்கணிப்பும், மாற்றானை மகிழ்விக்க வலிந்து எடுக்கும் இறை மறுப்பு நிலைப்பாட்டு முயற்சிகளும் நன்மை பயக்குமோ என் சகாவே!
இறைவனை மெய்யாகவே பயந்து கொள்வோம். நயவஞ்சகத்திற்கு வரையறுத்த வடிவமில்லை. அது எம்மில் மேலோங்குகிற போது உள்ளம் தெரிந்துகொள்ளும். அப்போது அல்லாஹ்வின் தண்டனையை பயந்து அஞ்சுவதன்றி வேறெதுவும் நன்மை பயக்கா.
மிக்க கருணையாளனே, எங்கள் இறைவா! எங்களை நயவஞ்சகத்தில் இருந்தும் காப்பற்றிவிடுவாயாக!
 உன்னுடைய கடுமையான பிடியில் இருந்தும் மீள முடியாத பிணியில் இருந்தும் எங்களை காத்தருள்வாயாக!
ஒருநாள், படைத்தவன் நாட்டம் கொண்டால், நாக்கு சுண்டி இழுத்துக்கொள்ளும். ஒரு கையும் ஒருகாலும் கோணலாகிப் போகும். வீணீர் வடிய இழுத்து இழுத்து நடப்பது அவ்வளவொன்றும் இலகுவானதல்ல.

 படைப்பு :-- உமையாழ். நாள் : 16-May-18, 5:08 am
மேலே