எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும்,...

தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும், ஆறங்கங்களையும் உயிர்க்குலத்திற்கு ஓதுவிக்கும் காட்சி. ஆலமர்ச்செல்வன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். ஜடாபாரத்துடன் விளங்கும் நான்மறையோதி வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வலது தொடையின் மேல் வைத்தபடி உடல் நேராகவும், அமர்வு நிலை ஒரு பக்கமாக சாய்த்தும் உள்ள நிலையில் அமர்ந்துள்ளார். இயல்பாக தென்முகக் கடவுள் அமரும் வீராசனத்தில் இருந்து இந்த அமர்வு நிலை சற்று வேறுபட்டுள்ளது. முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழியே செல்கிறது. வேதவல்லானின் மேற்புறம் கின்னரர்களும், கந்தர்வர்களும் காட்டப்பட்டுள்ளனர். ஆலமரத்தில் காட்டப்படும் உயிரினங்கள் சிதைந்துள்ளன. அறியக்கூடவில்லை. அலங்கரிக்கப்பட்ட அவரது ஆசனத்திற்குக் கீழே மான்கள் இரண்டு காட்டப்பட்டுள்ளன. மறையோதியின் இடையாடை முடிச்சுகள் ஆசனத்திற்குக் கீழேத் தொங்குகின்றன. கைகளில் கங்கணங்கள் காட்டப்பட்டுள்ளன. கைகளில் உள்ள சின்னங்கள் இன்னதென்று அறியக்கூடவில்லை. சிதைந்துள்ளது. அருகிலுள்ள சிறுகோட்டங்களில் வலது மேற்புறம் இணைசிங்கங்களும், அதற்குக் கீழே முனிவரும் முதிய மனிதர்களும் காட்டப்பட்டுள்ளனர். இறைவனின் இடது மேற்புறம் இணை வேங்கைகளும், கீழே முனிவரும் இளைய சீடர்களும் காட்டப்பட்டுள்ளனர்.


நாள் : 17-May-18, 5:08 am
மேலே