எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொருட்களை காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும் விழிப்புணர்வு...

பொருட்களை காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும் விழிப்புணர்வு கூட்டத்தில் 


உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து நெடுஞ்சாலை ஓர உணவகங்களில் உணவு தரம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தியது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் தரம் குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும். இதன்மூலம் தரமான உணவுப் பொருட் களைத்தான் பயன்படுத்துகிறோமா என்ற விழிப்புணர்வு நம்மிடையே உருவாக வேண்டும். மேலும், கடைகளில் நாம் வாங்கும் உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதிகளை பார்த்து வாங்கும் பழக்கம் நம்மிடையே வளர வேண்டும். 

நாள் : 19-May-18, 5:56 am

மேலே