எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏ.வி.எம் ஸ்டூடியோவில் திருமணம்.....ஆயிரக்கணக்கான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட ஏ.வி.எம்...ஆயிரக்கணக்கான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட ஏ.வி.எம் ஸ்டுடியோவில், உங்கள் திருமணம் நடந்தால் எப்படி இருக்கும்?  ஏ.வி.எம் புரொடக்‌ஷனின் கார்டன் பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு தந்துள்ளதால், அந்த வாய்ப்பு உண்டாகி இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ என்ற பெருமைக் கொண்டது. கமல்ஹாசன் போன்ற முன்னனி நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியப் பெருமையும் இவர்களுக்கு உண்டு. அபூர்வ ராகங்கள், சகலகலா வல்லவன், அன்புள்ள ரஜினிகாந்த் என எண்ணற்ற திரைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. திரைப்படங்களின், 100-வது நாள் விழா பெரும்பாலும்  இங்குதான் நடைபெறும். டைட்டானிக் படம் சென்னையில் 100 நாள் ஓடிய போது, அதற்கான விழாவும் இங்குதான் நடந்தது. அதுமட்டுமன்றி எம்.ஜி.ஆர், கலைஞர், ஸ்டாலின், ஜெயலலிதா,என்.டி.ராமாராவ் என சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரபலங்கள் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை இங்கு நடத்தினர்.   


பதிவு : senthil
நாள் : 14-Jun-18, 10:43 am
மேலே