எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காட்டில் ஒரு கூட்டம் -----------------------------------​ காட்டில் உள்ள விலங்குகள்...

  காட்டில் ஒரு கூட்டம் 
-----------------------------------​

காட்டில் உள்ள விலங்குகள் கூடி நின்று பேசிக்கொண்ருந்தன ..சிங்கம் ஒரு கேள்வியை எழுப்பியது :நாட்டில் உள்ள மக்களிடம் இருப்பவை சில நம்மிடம் இல்லை ஆனால் அதுதான் நமது சிறப்பு .தெரிந்தவர் கூறுங்கள் என்றது .அனைத்தும் ஒரே குரலில் கூறின :
சாதி மதவெறி , 
இனம் மொழிப் பிரச்சினை
ஒற்றுமையின்மை , 
பேராசை , 
ஏழை பணக்காரர் பாகுபாடு ,
பதவி மோகம் ,
மனமாச்சரியம் ,
மூடநம்பிக்கை ,
கருத்து மோதல் ,
அரசியல் கட்சிகள் 
என்று அடுக்கின.

சிங்கம், போதும் போதும் என்று கையசைத்து வாயடைத்து நின்றது.
காரணம் இதில்கூட நம்மவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் 
என்று நினைத்து.

பழனி குமார்  

நாள் : 22-Jun-18, 8:11 am

மேலே