எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உத்திரமேரூர் தேர்தல் : அப்படி ஒரு தேர்தல் நடந்திருக்கிறது....

உத்திரமேரூர் தேர்தல் :


அப்படி ஒரு தேர்தல் நடந்திருக்கிறது. “அடிப்படைக் குடியாட்சி” நடந்திருக்கிறது. அதுவும் நம் தமிழகத்திலேயே நடந்திருக்கிறது. ஓராண்டு ஈராண்டு அல்ல ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்கள் தோறும் அப்படிப்பட்ட குடியாட்சிதான் நிலவியது. அப்பொழுது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் பொய்யர் தேர்தலில் நிற்க முடியாது. பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று இல்லாத உறுதிகளை கூறிவிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் “நான் அப்படி எங்கு சொன்னேன்?” என்று அப்பட்டமாகப் பிதற்றும் தன்மையோர் நிற்க முடியாது. ஒரு விதக் கல்வியுமின்றி சொத்துமின்றி சுற்றமுமின்றி இருந்தவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓரிரண்டு ஆண்டுகளில் ஒருவிதத் தொழிலும் செய்யாமல், வியாபாரம் செய்யாமல் எந்த வழியிலும் உண்மையாகச் சம்பாதிக்காமல் திடீரெனப் பல லட்ச ரூபாய் சேர்ப்பாரே! கையூட்டு வாங்கியே வாழ்பவர்கள்! அப்படிப்பட்டவர் தேர்தலில் நிற்க முடியாது. ஒரு பேட்டையில் அடியாட்களை வைத்துக் கொண்டு அந்தப் பகுதியையே நடுங்க வைத்துத் தேர்தலில் ஜெயித்து வர முடியாது. ஊர்க்காரர்களை ஏமாற்றிவிட்டு அகப்பட்டதைச் சுருட்டலாம் என்பவர் வரமுடியாது. வந்த பின்னர் சுருட்ட ஆரம்பித்தால் அவர்களை உடனடியாக நீக்கவும் மீண்டும் அவர்கள் பொது வாழ்வில் தலைதூக்கவே முடியாமல் செய்யவும் வழிவகைகள் இருந்தன.

நாள் : 20-Jul-18, 5:00 am

மேலே