எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதம் வளர்ப்போம் மனிதா ..! வளர்ப்போம் மனிதா வளர்ப்போம்...

                          மனிதம் வளர்ப்போம் மனிதா ..! 


வளர்ப்போம் மனிதா வளர்ப்போம்
மகத்துவமிக்க மனிதம்  வளர்ப்போம்…!
தவிர்ப்போம்  மனிதா தவிர்ப்போம்
தரக்குறைவான தன்னலம் தவிர்ப்போம்…!தன்னலம் தவிர்த்து பொதுநலத்தில் திளைப்போம்…!பொதுநலம் காத்தவன் புதைந்து போவதில்லை
ஒருவேளை புதைந்தாலும்….ஒருவேளை புதைந்தாலும்…!மீண்டும் துளிர்த்தெழுவோம் என்று சொல்லிவை…
அரளிமரமாய் அல்ல…ஆலமரமாய்…!
சிந்தித்துப்பார் மனிதா…. சிந்தித்துப்பார்…?
மானுடப் பிறவி பெற்றாரெல்லாம் மனிதரல்ல…மகத்துவமிக்க மனிதம் காப்பவரே மனிதர்…!
ஆபத்தில்  இருப்பவனை அறிய மறுத்தோம்…ஆடம்பரமாய் செலவுகள் பல செய்து களித்தோம்...!
தன்சார்ந்தோரை  தவிக்க விட்டோம் - பின் தவத்தினை மேற்கொண்டு புனிதயாத்திரை சென்றோம்…!இறைவன்மீது எல்லையில்லா பக்தி கொண்டோம்
இறைவனவன் கூறியதை ஏற்க மறந்தோம்…!
இறைவன் என்பவன் யார்..? அவன் எங்கே இருக்கிறான்..?இஸ்லாமியர் கூறினார் ஒளி வடிவத்தில் தோன்றுபவரென்று..!க்(இ)ருத்தவர் கூறினார்  தேவாலயங்களில் காணப்படுபவரென்று..!இந்து மதத்தவர் கூறினார்  கோவில்களில் குடிகொள்பவரென்று..!
யாருமே கூறவில்லை … இனியவன் இறைவனவன்
மக்களின் தூய மனங்களிலே வசிப்பவரென்று…!
என்னடா இது..? ஏதோ பிதற்றுகிறானே…?
இறை என்றால் புனிதம்..!இறைவனவன் புனிதன்..!புனிதத்தை புனிதஸ்தலங்களில் தானே உணர முடியும்…
இவன் ஏதோ..? மனிதம்…மக்கள்…மனம்..என்கிறானே..?
ஒன்றும் புரியவில்லையே…ம்ம்ம்…உண்மைதான் …
இறை என்றால் புனிதம்..!இறைவனவன் புனிதன்..!
ஒப்புக்கொள்கிறேன்..!அப்புனிதம் மனிதம் என்றால்…அம்மனிதம் வாழ்வது தூய மனங்களில்  என்றால்..?அத்தூய மனம் உன்னுடயதென்றால்…?அடே மானிடா..!உன்னுள்ளேயே இறைவன் வாழ்கிறானடா…
அவனை ஊரூராய் தேடி அலைவதேனடா…?
உண்மையும் உணர்வுமுள்ள மனிதா – உந்தன்
உதடுகள் உரைப்பதைக் கேட்டுப்பார்..!நான் என்று சொல்லும்போது இணைவதில்லை இரண்டும்
நாம் என்று சொல்லும்போது பிரிவதில்லை என்றும்..!
“நான் அல்ல ;நாம்”  என்றுரைக்கும் குரல்  - ஓர்
நாத்திகனுடையதல்ல…நாட்டுப்பற்றுள்ளவனின் குரல்..!

                                                                                    கவிஞர் - அ.மு.து 

நாள் : 9-Aug-18, 9:14 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே