எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புது பிரபஞ்ச காதல் ❤️ அன்பே! உன்னை நினைவென்னும்...

புது பிரபஞ்ச காதல் ❤️

அன்பே! உன்னை நினைவென்னும் ஏவுகணையில் ஏற்றி, 
பிரபஞ்சத்தில் யாரும் தொலைநோக்கியிலும் நோக்கிடா கோளில்  இறக்கி விடுவேன்;

அதில், 
வளியில்லா வெற்றிடத்தில் என் மூச்சுக்காற்றை நிரப்பி வளிமண்டலமாக்கி, உன்னை பறக்க விடுவேன்;

நீரில்லா கோளில் என் கண்ணீரை ஊற்றி கடலாகி, உன்னை மிதக்கச் செய்வேன்;

ஒளியில்லா இருளில் என் கருவிழியை வெண் விழியாகி, புது வண்ணவொளியை காண்பிப்பேன்;

எல்லையில்லாக் கோலத்தில், என் கோடானக்கோடி உயிரணுவை பணியாளாக்கி, அரண்மனையமைத்து உனக்கு பணி புரியச் செய்வேன்;

புள்ளில்லா நிலத்தில், என் உதிரத்தை உரமேனத் தெளித்துச் சோலையாக்கி, உனக்கு அமிர்தம் ஊட்டிடுவேன்;

உயிரில்லாக் கோளில், காலமில்லா வெளியில், காதல் கொண்டு, நான் புது பூமியாகி, நீ என் துணைக்கோள் நிலவாகி, நம் பிள்ளைகள் நவக்கோள்களாகி, காதல் துகளிலிருந்து வெடிக்கும் முடிவிலா பேரிடி அன்புலகத்தை அமைக்கலாம் வா! 💞

~Prabhakaran Balakrishnan

பதிவு : Prabhakaran
நாள் : 12-Aug-18, 11:44 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே