எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

--------------காவியச் சிந்தனை---------------- ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும்...

                                                          --------------காவியச்  சிந்தனை----------------


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்                         -------திருக்குறள் 

விதியினும் வலியது வேறொன்றும் இல்லை .அப்படியே மற்றொன்று அதை  எதிர்த்து சூழ்ந்து 
வந்தாலும் தான் முந்திச் சென்று இறுதியில்  விதியே   வெல்லும் .
இதற்கு காவிய எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம் ,
கோவலன் திருட்டுப் பழி சுமத்தப்பட்டு அநியாயமாக கொலை தண்டனை அடைந்தது 
ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டியதால் என்று சொல்கிறார் சிலம்பாசிரியர் .இளங்கோ .
சிலப்பதிகாரம் புனை கதை இல்லை .நிகழ்ந்த வரலாறு .
விதியை மதியால் வெல்லலாம் கத்தியால் வெல்லலாம் ஈட்டியால் வெல்லலாம் என்று எவனாவது 
காதுகுத்தினால் அவன் தன்னையும் ஏமாற்றிக்கொண்டு உன்னையும்  ஏமாற்றுகிறான் . 

நாள் : 2-Sep-18, 9:42 am

மேலே