எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் வாழ்வுஆதவனவன் மறைந்த வேளை ஆனரங்கிவள் வீதி யோரம்...

என் வாழ்வு


ஆதவனவன் மறைந்த வேளை
ஆனரங்கிவள் வீதி யோரம் 
விட்டில் பூட்சியென 
வெளிச்சம் தர வெட்கப்படும் 
தெரு விளக்கின் கீழே 

 வகிடெடுத்து வாரி வட்டபொட்டிட்டு
அலையலையாய் பின்னி 
அள்ளி முடிந்த கருங்கூந்தல்
அதிலே ஆயிரம் மல்லி 

 அன்றைய வாழ்வதனைத் தேடி
அங்குமிங்கும் அலைபாயும் கண்கள்
செக்கச்சிவந்த அதரம் அதிலே
சிருங்காரச் சிரிப்பு 

 மஞ்சத்திற்கு தூது விடும் 
மங்கையிவள் மன்மத பார்வை
மாராப்பு நழுவிய சேலை
சரிந்த கொங்கை சதிராடும் இடை 

 நித்தமொரு மஞ்சத்தில் தினம் தினம்
புத்தம் புது கணவர் பலர் நிமிடக்கணக்கில் 
குற்ற உணர்வெம்மைக் கொல்லும்
நீண்டதொரு யுத்தம் தினம் தினம் 
எங்கள் நெஞ்சுக்கடியில் 

 அழுது புலம்பினோம் 
அடைக்கலம் கேட்டோம் 
ஆடை அவிழ்த்து எங்கள் அங்கம் கண்டு
ஆனந்தப்பட்டதிந்த அகிலம் 

 விலை கொடுத்து கூட்டிச் சென்று எமை
விருந்தாக்கி மகிழ்வர் விடியும்முன்னே
விருந்தாகக் கொண்டவரே 
விரட்டியடிப்ப்பார் வீதியிலே
விலை மகள் இவளென்று 
வீராப்பும் பேசுவார் 

 நெஞ்சம் விரும்பியா இந்த
மஞ்சத்தை ஏற்றோம் 
தஞ்சம் கொடுதவரன்றோ
தள்ளினார் இப் படுகுழியில் 

 ஊரும் உறவும் சுற்றமும் நட்பும் 
கண்ட இடமதில் கைகொட்டிச் சிரிக்கும்
குடி கெடுக்க வந்த கூத்தியாள் இவளென்று 
குசு குசுவென பேசி குற்றமும் சாட்டும் 

 குடி கெடுக்க வரவில்லை 
குலமாந்தரே நாங்கள் 
குடி கெட்டு குட்டிச் சுவரானோம் 
குடும்பமதை நினைத்துருகி 
குற்றுயிராய் வாழுகின்றோம் .            

நாள் : 13-Sep-18, 5:21 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே