எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழகத்தின் எந்த ஊரிலும் நல்ல நூலகங்கள் உண்டு. அங்கே...

             தமிழகத்தின் எந்த ஊரிலும் நல்ல நூலகங்கள் உண்டு. அங்கே நல்ல நூல்கள் பெரும்பாலும் கிடைக்கும். அங்கே என்ன இருக்கப்போகிறது என்னும் அவநம்பிக்கையைக் களையவேண்டும். அங்கே கொஞ்சம் காத்திருக்கவேண்டியிருக்கலாம். நேரம் கணித்து செல்லவேண்டியிருக்கலாம். பலநூலகங்களில் கொஞ்சம் தேடவேண்டியிருக்கும். ஆனால் கண்டிப்பாக நூல்கள் உண்டு. பெரும்பாலான நூலகங்கள் கைவிடப்பட்டு கிடக்கின்றன தமிழ்நாட்டில். வாசிக்க விழைபவர்கள் ஒரு கட்டத்தில் நூலகங்களைத்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாசிப்புவெறிக்கு நூல்களை காசுகொடுத்து வாங்குவது கட்டுப்படியாகாது, எவருக்கும். இன்னும் கொஞ்சம் முயலலாம் என நினைக்கிறேன்.


நூல்களை இரவல்கொடுக்கையில் ஒன்று செய்யவேண்டும். சின்ன நூல்களை கொடுக்கவேண்டும். மெய்யாகவே வாசித்துவிட்டு உரிய நேரத்தில் சிரமம் எடுத்து திருப்பிக்கொண்டுவந்து கொடுக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். வாசிப்பவர்கள் மேலும் வாசிக்க விரும்புவார்கள், ஆகவே திரும்பக்கொண்டுவந்து தந்துவிடுவார்கள். வாசிப்புப்பழக்கம் அற்றவர்கள், தொடர்ச்சியாக வாசிக்காதவர்களே வாங்கிய நூல்களை ஊறப்போட்டு திரும்பத்தராமல் வைத்திருப்பார்கள். ஆச்சரியமென்னவென்றால் இவர்கள்தான் முக்கியமான, பெரிய நூல்களை இரவல் கேட்பார்கள். வாசிக்காதவர்கள் என்பதனால் இவர்களுக்கு அந்நூலை தங்களால் வாசிக்கமுடியுமா, என்பதுகூட தெரிந்திருக்காது.

எந்த நூலும் 15 நாட்களுக்குமேல் இன்னொருவர் கையில் இருக்கக்கூடாது. அந்நூல் சேதமடைந்தே திரும்பி வரும். திருப்பிக்கொண்டுவருவதற்கான தேதியை கடைப்பிடிப்பவர்களுக்கே மேலும் நூல்களை அளிக்கவேண்டும்.  ‘சும்மா இந்தவழி வந்தேன், அதான் புக்கை திருப்பிக்குடுக்கலாம்னு நினைச்சேன்’ என்று சொல்பவர்களுக்கு நூலை இரவல் அளிக்கக்கூடாது. அதன்பொருட்டே வருபவர்களுக்கே அளிக்கவேண்டும்


ஜெ 

நாள் : 24-Sep-18, 4:17 pm

மேலே