எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நுணுக்கமான வரிகளிலும் நீ தேவதையாகத்தான் இருக்கிறாய்.. நீ வருகிற...

நுணுக்கமான வரிகளிலும்
நீ தேவதையாகத்தான் இருக்கிறாய்..
நீ வருகிற பாதையில்
தமிழ் வருகிறது..
என்னிடம் சண்டை போடுகிற தமிழ்
உன்னிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகிறது...

போடீ...
நீ என்ன சொன்னாலும்
அழகாயிருக்கிறது....
தமிழுக்கு பிடித்தமானவள் நீ...

எதையோ நினைத்து புள்ளி வைத்து-
எதோ ஒரு கோலம் போட்டு
நீ ரங்கோலியெனச் சொல்வது போல-
எப்படியோ தொடங்கி
அப்டியே முடித்து
லேசா ......உன்னை தெளித்து விடுகிற போது-
கவிதையாகி விடுகிறது...
இந்த இடத்தில் தான்
நீ தேவதையாகி விடுகிறாய்.....

அடீ....
நுணுக்கமான வரிகளிலும்
நீ தேவதையாகத்தான் இருக்கிறாய்.......

#தேவதையின்தேநீர்கடை
பொள்ளாச்சி முருகானந்தம்...

நாள் : 6-Nov-18, 5:52 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே