எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 2 ******************** எந்த ஒரு நபரிடமும்...

  வாழ்க்கைப் பாடம் 2
********************
எந்த ஒரு நபரிடமும் சந்தித்த முதல் முறையே அவரைப் பற்றி ஓகோ என்று புகழ்வதும், பெருமையாக பேசுவதும் பிறகு அதே நபரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போக, அவரைப் பற்றி மிகவும் இகழ்ந்து பேசுவதும், அவரைப் பற்றி அவதூறாக கூறுவதும், பழிவாங்கும் எண்ணம் கொள்வதும் தேவையற்றது. தவறான செயலும் கூட. இதை பலரும் புரிந்து கொள்வதில்லை. நான் உட்பட. காரணம் எனக்கும் அந்த அனுபவம் உண்டு. 


அதனால் நாம் சில பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் அல்லது வருந்த வேண்டியும் இருக்கும். 

ஒருவரைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் அவரிடம் நன்கு பேசி அறிந்து பழகியிருக்க வேண்டும். அப்போது தான் அவரைப் பற்றி நாம் மதிப்பீடு செய்து கருத்து கூற முடியும். 

எந்த ஒரு முடிவும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையாக அமைய வேண்டும் அல்லது அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். 

பழனி குமார் 
07.11.2018 —  

நாள் : 8-Nov-18, 7:02 am

மேலே