எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஏய் லூசு... இப்படித்தான் எப்பவுமே கூப்டுவே ஆனா எல்லாத்தையும்...

ஏய் லூசு...
இப்படித்தான் எப்பவுமே கூப்டுவே
ஆனா
எல்லாத்தையும் விட
அவன்தான் புத்திசாலினு
எல்லோரிடமும் சொல்லுவே.......

பாக்காத மாதிரி போவாளாம்
ஆனா
டேய்..யாரடா அப்படி உத்து உத்து பாக்குறேனுதான்
முதல் மெசேஜ் வரும்........

நீ எப்ப சாப்டியானு கேட்டாலும்
நீ ஃபீல் பண்ணனும்னே
நான் இன்னும் இல்லடினு சொல்லனும்
அதான் உனக்கு ரொம்ப பிடிக்கும்........

ஸாரிடா....
ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா
இல்லடி ...இப்பத்தான் வந்தேன்......
கேட்டு கேட்டு-
கோயிலா இருந்தா சாமிக்கும்.....
பஸ் ஸ்டாண்டா இருந்தா டிரைவருக்கும்
புளிச்சுப்போச்சு...
ஆனா
எனக்கு புடிச்சுப்போச்சு......

இதுக்குப்பேர்தாண்டி
வாழ்றது .....பாப்பா.......

#தேவதையின்தேநீர்கடைl

நாள் : 8-Nov-18, 7:18 am

மேலே