எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் - 5 ​​ -------------------------------------​ "உள்ளவரை...

வாழ்க்கைப் பாடம் - 5 ​​
-------------------------------------​


"உள்ளவரை உதவிடுக "​ என்பது நான் மண்ணில் உள்ளவரை ,நம்மால் இயன்றவரை அடுத்தவர்க்கு உதவுதல் ஆகும் .உதவும் மனப்பான்மை நம்முள் என்றும் நிலைத்திருக்க வேண்டும். பணம் கொடுத்து உதவுதல் மட்டுமே இதன் பொருள் இல்லை .எந்தவிதத்தில் நம்மால் மற்றவருக்கு அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமோ ,அவர்கள் எதிர்பார்க்கும் நோக்கில் , எவ்விதத்தில் செய்தால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று சிந்தித்து முடிவெடுத்து உதவிட வேண்டும் . ஆனால் அதே நேரத்தில் அவ்வாறு உதவி செய்வதால் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் பலன் ஏற்படும் என்று மனதில் நினைத்து ,அல்லது பிரதிபலனை எதிர்பார்த்து உதவுதல் என்பது தவறான செயலாகும் .நாம் செய்திடும் உதவி அவர்களின் வாழ்விற்கு நல்லதோர் வழியை உருவாக்கிட வேண்டும் .அதுமட்டுமன்றி அப்போதைய அவசர ,அவசியமான ஒன்று அல்லது அவர்களின் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்ற அளவில் இருக்க வேண்டும் .

அக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பலரும் இந்த சமூகத்திற்கு பலவிதத்தில் உதவியதால் தான் இன்றும் பலர் அதன் பலனை அனுபவித்து வருகின்றனர்,வருகின்றோம் என்பதை எவரும் மறைக்கவோ மறுக்கவோ இயலாது .இதை அனைவரும் ஒப்புக்கொள்வர் என்று நினைக்கிறேன் .உதவிடும் எண்ணம் என்பது தானாக உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும் . அடுத்தவருக்காக அல்லது புகழுக்காக பெயர் பெற வேண்டும் என்ற நோக்கம் எழவேக் கூடாது .அது உதவியே இல்லை .அது தற்பெருமைக்கு வழிவகை செய்தலன்றி வேறல்ல . அதுபோன்ற சுயநலமும் இருக்கக் கூடாது . நம் வாழ்க்கை என்பது இந்த பூமியில் நிரந்தரமில்லா ஒன்று .அப்படி நினைத்து செய்பவர்களின் பெயரும் புகழும் மண்ணில் நிலைத்து இருப்பதும் இல்லை .அதற்கு பல உதாரணங்கள் உண்டு .அனைவரும் அறிந்த ஒன்றுதான் .ஆகவே மற்றவர்கள் மனம் மகிழ்ந்திட ,வாழ்வில் உயர்ந்திட , நிலை மாறி நிம்மதி அடைந்திட , உள்ளம் குளிர்ந்திட ஏதாவது ஒரு வழியில் அவர்களின் தேவையை உணர்ந்து அவர்களே கேட்காவிடினும் நாம் உதவுதல் வேண்டும் .

இப்படி வாழ்ந்து மறைந்த , வாழ்கின்ற பலரின் செயலும் வாழ்க்கையும் நமக்கு என்றும் ஒரு பாடம் .

பழனி குமார் 
14.11.2018

நாள் : 15-Nov-18, 7:18 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே