எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட...

தமிழர்களில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட விரும்பாமல் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களையே சூட்டுகிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயர்களில் குறைந்த பட்சம் 50% பெயர்கள் பெயர்ச் சொற்களாக இல்லை. பெயரடைகளைப் (Adjectives) பெயர்ச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். 

      தங்கள் குழந்தைக்கு வைக்கும் பெயரின் பொருள் தெரியாமலும் அதைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமலும் பிறமொழிப் பெயரைச் சூட்டுகிறார்கள். 

     ஒரு கடையின் பெயர்ப் பலகையில் நான்     பார்த்த பெயர் Bavithra Textiles. Pavithra என்று எழுதவேண்டியதை Bavithra என்று எழுதியிருக்கிறார்கள். நிச்சயமாக அந்தப் பெயரை அவர்கள் சரியாக உச்சரிக்க வாய்ப்பில்லை. அப்பெயரின் பொருளும் தெரிந்திருக்காது.

     சில பெற்றோர்         இந்திப் பெயரென எண்ணி எம்மொழியிலும் இல்லாத பெயரை அவர்கள் குழந்தக்குச் சூட்டுகிறார்கள்.

   எனது இளம் நண்பர்கள் இருவரைத் தனித் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும்  தங்கள் மனைவியர்     பெண் குழந்தையைப் பெற்றிருப்பதாகக் கூறினர். வாழ்த்து தெரிவித்துவிட்டு குழந்தையின் பெயர் பற்றிக் கேட்டேன். ஒருவர் "அய்யா, எங்க பாப்பாவு பேரு 'பூவிஷா' என்றார். அவரை திருப்திபடுத்த "நல்ல பெயர். வாழ்த்துக்கள்!" என்றேன். இன்னொரு நண்பரின் குழந்தையின் பெயர் "கிருத்தியா".

     நான் முடிந்தவரை வலைத் தளத்தில் தேடிப்பார்த்தேன். எந்த மொழியிலும் இல்லாத பெயர்கள் அப்பெயர்கள்.

அழகான தமிழ்ப் பெயர்கள் இருந்தாலும் தமிழர்கள் ஏன் பிறமொழிப் பெயர் மோகத்தில் திளைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பள்ளி அப்பள்ளியின் சாதனை படைத்த மாணவ, மாணவியர் படங்களுடன் பெயர்களையும் விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் நான் கண்ட ஒரு நல்ல தமிழ்ப் பெயர் 'உரைநடை'.

      சமீபத்தில் இயற்கை எய்திய பேராசிரியர் லெனின் தங்கப்பா அவர்கள் இரண்டு முறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அவரது  பிள்ளைகளின் பெயர்கள்: மின்னல், இளம்பிறை, கதிரொளி. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில்கூட 80% ற்கு மேற்பட்டவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களைத்தான் அவர்கள் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளார்கள். 

    இந்த பிறமொழிப் பெயர் மோகத்திற்கு திரை ரசனை தான் காரணியாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மட்டும் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இன்றில்லை வேறுபாடு.

பதிவு : மலர்91
நாள் : 21-Nov-18, 12:35 am

மேலே