எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கைப் பாடம் 13 --------------------------------- " நோயற்ற வாழ்வே...

  வாழ்க்கைப் பாடம் 13
---------------------------------


" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " என்பது மூத்தோர் நமக்கு கூறிய அறிவுரை . " நோய்க்கு இடம் கொடேல் " எனபது ஆத்திச்சூடி கூறும் நல்லுரை .

உண்மையில் இதை எப்படி அந்த காலத்திலேயே கூறிவிட்டு சென்றார்கள் என்றே தெரியவில்லை . இது ஒன்றும் மேலோட்டமாக கூறியதல்ல .அனுபவத்தின் அடிப்படையில் , மெய்வருத்தம் கண்டு வழங்கிய வாய்மொழி மட்டுமன்றி . உணர்ந்து கூறிய உண்மையான ஒன்று . இதை நான் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்வதற்கு காரணம் , தொட்டால்தான் தெரியும் நெருப்பின் சூடு என்பது போல அடிக்கடி நோயினால் படுத்து வருந்தியவன் , வருந்துபவன் என்ற அடிப்படையில் தான் கூறுகிறேன் ஒருவரிடம் கோடிகோடியாக பணம், வசதிகள் ஆயிரம் என இருந்தும் , உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தால் அவைகளால் ஒரு பலனும் இருக்காது என்பதை அறிந்தும், படித்தும் , பார்த்தும் உணர்ந்தவன் நான் . இன்றும் சுயஅனுபவத்தின் மூலம் உணர்கிறவன் .

ஆனால் இந்த காலத்தில் உணவு வகைகளும் , உற்சாகம் பெற்றிட உல்லாச வழிகளும் உண்டு . நாகரீக வளர்ச்சியால் சுவைத்திடும் நாவும் நாள்தோறும் விதவிதமாய் கேட்கிறது .உணவு விடுதிகளும் கூடுது ,அதற்கேற்ப மருத்துவமனைகளும் கூடுது .மேலும் தற்போது நாம் விரும்பும் உணவகத்தில் இருந்து விருப்பமான உணவு வகைகளை வீட்டிற்கே கொண்டுவரும் வசதிகளும் முறைகளும் பெருகிவிட்டதால் , இப்போது வீட்டு உணவும் மறந்து போகிறது, உள்ளமும் அதை உதறிவிட்டு உடனடியாக அதற்கு உத்தரவிட தோன்றுகிறது அவ்வப்போது .

(அடியேனும் அப்படித்தான் , நானும் விதிவிலக்கல்ல என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் .ஆனாலும் அதன் பலனை உடல்ரீதியாக நோயால் துயரை அனுபவிக்கும் பொழுதுகளும் இல்லாமல் இல்லை )​.

எனது வேண்டுகோள் மற்றும் ஆலோசனை : இளைய தலைமுறையினர் அக்கால இயறக்கை உணவுகளை பற்றியும் அதன் பலன்களையும் முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும் ஆரம்பத்திலேயிருந்தே சுய கட்டுப்பாட்டுடன் பெற்றோர்கள் குழ்நதைகளை வளர்க்க வேண்டும் . எது நன்மை பயக்கும் என்பதைவிட எதனால் எப்படி உடல்நலக்கேடு விளைகிறது , என்பதை விளக்கி கூறினால் சற்று மாறுவதற்கு இளவயதிலேயே மாற்றம் காண மார்க்கம் உண்டு .உண்ண வேண்டியவை ​, தவிர்க்க வேண்டியவை மற்றும் குறைக்க வேண்டியவை எவை என்பதை அறிந்து உணவு முறையை மாற்றிக் கொண்டால் , மேலும் சுகாதார வாழ்வின் அடிப்படை தேவைகளையும் சுத்தமான சுற்றுச் சூழலும் அமைந்திட நம்மை நாமே மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும் . 

நீண்ட ஆயுளுடன் நல்ல தேகமுடன் நலிவிலா பொலிவான வாழ்க்கை வாழ இவை அனைத்தையும் பாடமாக கொள்ளுதல் வேண்டும் .


பழனி குமார்  

நாள் : 6-Dec-18, 7:33 am

மேலே