எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒன்று மற்றும் தெரிய விரும்புகின்றேன் கனவுகளில் பார்த்து பேசி...

ஒன்று மற்றும் தெரிய விரும்புகின்றேன்


கனவுகளில் 
பார்த்து 
பேசி 
பழகிய முகம்... 
நிஜத்தில் 
பார்த்த போது 
நான் 
ஊமையானேன்... 
என்னையே 
நான் கிள்ளி 
பார்க்கிறேன்... 
நீ தானா அது 
என்பதை அறியவே... 
என் கனவுகளின் 
ஆழத்தில் 
இருந்த நீ... 
மிதந்து மிதந்து 
மேலே வருகிறாய்
காற்றாடியை 
போலவே... 
அதே புன்னகை... 
அதே வில்கொண்ட 
புருவம்... 
அதே குழந்தையின் 
மனம் ... 
ஒன்று மட்டும் 
உன்னிடம் 
வித்தியாசம் 
மாறியிருந்தது
அப்போது... 
உன் கழுத்தில் 
தொங்கிய 
மாங்கல்யம் அது..
அப்போதே 
என் நிஜங்களை 
மீண்டும் 
கனவுகளாக்கி 
கொண்டேன்... 
ஆனாலும் 
உன்னை 
பார்க்கிறேன் 
பேசுவதற்கு 
வார்த்தைகள் 
இல்லாமல்... 
ஒன்று மட்டும் 
உன்னிடம் 
தெரிய 
விரும்புகிறேன்... 
எப்போதாவது 
என் காதல் 
உனக்கு 
தெரியவந்தால்
அப்போது மட்டும் 
சொல்... 
உன் கனவிலும் 
நான் 
வந்தேனா என்பதை ... !

த. பக்தவச்சலம். 



பதிவு : Bakthavachalam
நாள் : 8-Dec-18, 6:11 am

மேலே