எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறக்கம் !!! நிசப்தத்தின் எல்லை..!! மரங்களின் பேச்சை தென்றல்...

உறக்கம் !!!
நிசப்தத்தின் எல்லை..!! 
மரங்களின் பேச்சை தென்றல் 
மொழிபெயர்க்கும் தருணமே - இரவு..!! 
கீச்சிடும் ஊர்வனவற்றின் கூச்சல் 
விண்ணைத்தொடும் அமைதியே - இரவு..!! 
மலைகளும் மேகங்களும் 
ஒன்றிணைந்தாற்போன்ற கருமையே - இரவு..!! 
கைபேசி சினுங்கள் எதிபார்க்கும் 
உச்சகட்ட ஓய்வுநேரம் - இரவு..!! 
முற்றத்தில் நின்று பார்த்தால் 
மாறுபட்ட அழகைக்காட்டும் - இரவு..!! 
பலரின் பயமும் 
சிலரின் தைரியமுமே - இரவு..!! 
நெடுந்தூர பயணத்தில் 
நெருக்கமான தோழியாகும் 
இரவின் எழில்..!! 

நாள் : 9-Dec-18, 9:26 pm

மேலே