எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சொல்லித் தெரிவதில்லை சொல்லியும் புரிவதில்லை பகுத்து அறிவதும் வகுத்து...

 சொல்லித் 
தெரிவதில்லை 
சொல்லியும் 
புரிவதில்லை 
பகுத்து அறிவதும் 
வகுத்து வாழ்வதும் 
சுயசிந்தனை 
இல்லாதவருக்கு
சிந்திக்கும்திறன் 
அல்லாதவருக்கு ..!


அசலெது நகலெது 
ஆய்ந்து அறியாது 
கண்டதும் கூறுவதும் 
உறுதிபட உரைப்பதும் 
அறிவார்ந்த செயல் 
அனுபவத்தின் குரல்..!


எதிர்பார்த்தது
நடக்காது
ஏமாற்றம் 
அடைந்தால் 
மனமதும் 
தள்ளாடும்
இதயமதில் 
இடியிடிக்கும் 
உள்ளமதும்
பள்ளமாகும் ..!


கூற நினைத்ததை 
எழுத எண்ணியதை 
பதிவிட இயலவில்லை 
எனினும் மனமில்லை 
பதிலுக்கு வேறொன்றை 
வரிகளாய் வழங்கினேன் ..!


அதே நிலைதான் 
இங்கும் இன்று...
மாறிட வேண்டும் !
மாற்றம் உருவாக 
ஏற்றம் பெற்றிட 
காற்றினிலும் வேகமாக 
கடமையை ஆற்றிடுக. !


பழனி குமார் 
06.02.2029 — .  

நாள் : 6-Feb-19, 7:46 am

மேலே