எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மன வலிமை .......... எனது மனதின் எண்ணத்தை இங்கே...

மன வலிமை ..........

எனது மனதின் எண்ணத்தை இங்கே சிருக வடித்து உள்ளேன்  ...
ஒவ்வொருவரும் அவரவர்கள் மனவலிமையை சோதித்து பார்த்திருப்பீர்கள் .....இதில் எந்த அய்யமும் எனக்கு இல்லை ..நான்என் மனவலிமையை எப்படி சோதித்து பார்த்தேன் என்றால்இன்றளவும் என் மனம் இன்னும் வலிமையடைய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது ,ஏனெனில் நான் என் மனவலிமையை ஒரு ஓங்கி நெடிந்து வளர்ந்த மரத்துடன் ஒப்பிட்டு கொண்டுள்ளேன் ,அதனால் தான் நான் கூறினேன் என் மனம் இன்னும் வலிமையடையவேண்டும் என்று,ஒரு மரம் எப்படி வளர்கிறது  முதலிலே இதற்கு மரம் என்ற பெயர் உண்டா என்றால் இல்லை...முதலில் இந்த பூமியில் ஒரு விதையாக உருவெடுத்து விதை சிறுது சிறிதாக செடியாக மாறி பிறகு அது  வளர துவங்கி விழுதுகளாகவும், கிளைகளாகவும்  உருமாறி நிற்கின்றது ..காய் கனி உள்ள மரம் என்றால் காய் கனிகளை தருகிறது ....வேறு பிற மரம் என்றால் நிழல் தருகிறது ....அது இப்பூமியில் உள்ள மாசுபட்ட காற்றை  கிரகித்து நமக்கு சுத்தமான காற்றையே தந்து சுவாசிக்க செய்கிறது ....இது அனைவருக்கும்  தெரிந்தது தான் இதில் எந்த ஆச்சர்யமும் கிடையாது ...ஆனால் மரத்தை நான் எப்படி மனவலிமையுடன் ஒப்பிடுகிறேன் என்றால் ...மரங்கள் யாவும் ஒத்தமனம் படைத்தவை அதற்க்கு பாகுபாடு கிடையாது ....எவ்வளவு பெரிய துரோகம் ,கொலை, கொள்ளை செய்துஇருந்தாலும் மரம்  அவனுக்கு சுவாசிக்க காற்றும் தங்க நிழலும் தரும் ..ஏன் உதாரணமாக கழுகு எங்கு பறவைகள் கிடைக்கும் என்று தேடி அதனை கொன்று உண்டு வந்தாலும் அதற்கும் தங்க இடம் கொடுப்பதும் மரம் தானே ...வீதிகளில் இந்த மரத்தை எத்தனை பேர் என்னவெல்லாமோ செய்கிறார்கள்  என்று எல்லரும் அறிவோம் ...மரத்தையே வேரோடு சாய்க்கும் மனிதர்களும் உண்டு ..ஆனாலும் அது  எவ்வளவு வலிமை உடையது ...அதை வெட்டி சாய்த்தாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்ந்து மனிதனுக்கே பயன்படுகிறது ...அதற்கு பழிவாங்கும்  எண்ணம் இல்லை ...இவன் துரோகி இவன் ஏமாற்றுபவன் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை ...வீதிகளில் ஒரு சிலர் மரங்களை மிகவும் கேவலப்படுத்தும் செயல் செய்கிறார்கள் ...அப்பொழுது கூட மரம் அமைதி காக்கிறது, எத்தனைபேர் அதை வெட்டி சாய்த்தாலும் , அதன் பழங்களை பரித்தாலும் ,கிளைகளை ஒடித்தாலும் ஏன் வேரோடு சாய்த்தாலும் மரம் தான் நிலையில் இருந்து மாறுவதில்லை, ஒத்த குணம்  ஒத்த மனம்  என்ற நிலையில் உள்ளது..ஆனால் நாம் என்ன செய்கிறோம்  நம்மை யாரேனும் காயப்படுத்தினாலும் துன்பப்படுத்தினாலும் நாம் மனதை நிலையாக வைத்திருப்பதில்லை ..பதிலுக்கு நாமும் அவ்வாறே செய்கிறோம் ..ஏன் நாம் ஒரு நிமிடம் யோசிக்க தவறுகிறோம் ..எதற்கு எடுத்தாலும் கோவம், பழிவாங்குதல் , அவசரம் ,பொறாமை, போராட்டகுணம்  என்று சுற்றி திரிகிறோம் ...இங்கு தான் நாம் நம் மனவலிமையை இழந்துட்டு இருக்கிறோம் ...மனிதன் மனம் ஒரு குரங்கு என்று ஒரு பழமொழி உண்டு ...ஆனால் குரங்கு கூட ஒரு நிமிடம் முறைத்து பார்த்து யோசித்து தான் முடிவு எடுக்கும் .. ஆனால் நாம் கடவுள் கொடுத்த அத்தனை அறிவையும்  உபயோகிக்காமல்   போலியான அற்ப மாய திரை என்ற கோவம் பொறாமை போன்றவற்றில் சிக்கி   தவிக்கின்றோம் ....நான் நன்கு உணர்ந்தேன் இதனை ....அதனால் தான் கூறினேன் என் மனம் இன்னும் வலிமையடையவில்லை என்று  அது வலிமை பெற முயன்று வருகிறேன் ..ஏனெனில் இவ்வுலகம் கொஞ்சம் சுயநலம் பிடித்தது  என்று நானும் நம்புகிறேன் ....சுயநலம் இருந்தால் தான் கொஞ்சம் நாம் நம்  வாழ்வில் வளர முடியும் என்று நம்புகிறார்கள் ....நான் என் சுயநலம் அடுத்தவர்களை பாதிக்காதவகையில் பார்த்துக்கொள்ளவிரும்புகிறேன் ...என் மனவலிமை ....வளரவும் முயல்கிறேன் ...
பிரியா.....

பதிவு : பிரியா
நாள் : 13-Feb-19, 12:54 pm

மேலே