எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீர்வுதான் எப்போது ? ---------------------------​-------- ​நேற்று நடந்த காஷ்மீர்...

தீர்வுதான் எப்போது ?
---------------------------​--------


​நேற்று நடந்த காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் நம்மையும் நமது நாட்டையும் 
பாதுகாக்கும் இந்திய வீரர்கள் 40 பேர் உயிர் இழந்ததை நினைக்கும்போது உள்ளம் 
உடைந்து போனது . மிகவும் வருத்தம் அளிக்கிறது. 

அதில் இருவர் தூத்துக்குடியை சேர்ந்த தமிழர் திரு சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்பதை நாளிதழில் பார்த்ததும் மேலும் சோகம் கூடியது நெஞ்சில்.அந்த ராணுவ வீரர்கள் அனைவருக்கும் எனது வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் செலுத்துகிறேன் .ஏன் இது போல் கொடூர நிகழ்வுகள் நடக்கிறது ? இதற்கு ஒரு முடிவே இல்லையா ?


இந்த அளவிற்கு வெறியுடன் அவர்கள் ஏன் திரிகிறாரக்ள் ? மத்தியில் ஆண்ட , ஆளும் அரசுகளால் ஏன் இதற்கு ஒரு முடிவு கட்ட முடியவில்லை ?இன்று அந்த 40 குடும்பங்களும் எவ்வளவு பாதிப்புக்கு ஆளாகி , தமது குடும்பத்தில் ஒருவரை இழந்து வாடி தவிப்பார்கள் என்று நினைக்கும்போது இதயம் அழுகிறது . இதுவரை யாராலும் ஒரு நிரந்தர தீர்வு காண முடியவில்லை ,ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுவதும் அடுத்து யார் யாருடன் கூட்டணி சேர்வது என்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் . 

இனியாவது அனைவரும் ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் , எப்படி பிரச்சினையை நாடலாம் , எந்த வழியில் தீர்வு காணலாம் , எப்படி இந்த அராஜக செயலுக்கும் நமது சகோதரர்களின் உயிர் இழப்பை இனியாவது நிறுத்தலாம் என்று யோசிக்கவாவது செய்வார்களா ?

இனி ஆட்சி அமைக்க இருக்கும் எந்த அரசானாலும் முதலில் இந்த பிரச்சினையை திறனுடன் கையாண்டு நமது வீரர்களை காப்பாற்றுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன் .


பழனி குமார் 
15.02.2019

நாள் : 15-Feb-19, 2:44 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே