எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேர்தல் வைரஸ் -------------------------------- நாட்டில் அரசியல் எனும் தீவிர...


தேர்தல் வைரஸ் 
--------------------------------

நாட்டில் அரசியல் எனும் தீவிர காய்ச்சல் தேர்தல் என்கிற வைரஸ் மூலம் பற்றிக் கொண்டது. எங்கும் இதே பேச்சு தான். மக்கள் மத்தியில் மட்டுமன்றி நாளிதழ்களில் ஊடகங்களில் சமுக வலைதளங்களில் அனைத்தும் இதுதான் இன்றைய பிரதானமாக திகழ்கிறது. அந்தக் காலத்தில் மரத்தடியில் டீக்கடையில் வீதிகளில் என்ற நிலை மாறி இன்று வளர்ச்சி அடைந்து செல்போன், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் என பல பரிமாணங்களில் பலவிதமான நடைகளில் பரவி வருகிறது.தேர்தலில் பல கட்சிகள் தனித்து அல்லது கூட்டணியில் மக்களை சந்திக்க தயாராகிறது. ஆட்சி மாற்றம் வந்தால் காட்சி மாறும்... ஆனாலும் மக்களுக்கு ஒன்றும் பெரிய மாற்றம் அவர்கள் வாழ்வில் மாறுவதாக தெரியவில்லை இதுவரை கடந்து காலத்தின் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் போது. 

ஒவ்வொரு கட்சியும் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை யாரும் முழுமையாக நிறைவேற்றுவது இல்லை. எவரும் மறுக்க முடியாது. ஓட்டு போடும் நாமும் அதைப் பற்றி அவ்வளவாக நினைப்பது இல்லை. கவலையும் கொள்வதில்லை. நம்மிடம் பல ஆண்டுகளாக ஊறிப்போன உண்மை இது.ஏன் நாம் சிந்திப்பதே இல்லை., நமக்கும் நாட்டிற்கும் யார் நன்மையை செய்தார்கள் மற்றும் செய்வார்கள் என்று அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்.மேலும் பலரும் பணத்தை வாங்கி தமது ஒரே உரிமையை ஒட்டுக்கு விலையாக நினைத்து தவறான முடிவுடன் வாக்களிப்பதால் எந்த அளவுக்கு நாம் பாதிப்புக்கு உள்ளாகி நாடும் சீரழிகிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்

.இன்னும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் கூட எதுவும் இல்லாத நிலைதான். அதைவிட முக்கியமாக நாம் எதையும் எளிதில் மறந்து விடுகிறோம். அதுவே அரசியல்வாதிகளுக்கு கூடுதல் வாய்ப்பாக ஆகிவிட்டது.சிந்தியுங்கள்...இதை நான் அழுத்தமாக கூறினாலும் எப்படி கங்கை எப்போதும் சுத்தமாகாதோ, நதிகள் இணைப்பு திட்டமும் நிறைவேறாதோ அப்படித்தான் எனது விழைவும் விழலுக்கு இறைத்த நீராக ஓடி விடுகிறது.


பழனி குமார் 
21.02.2019

நாள் : 22-Feb-19, 7:50 am

மேலே