எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

21 . இயற்கை காப்போம் இயற்கை அன்னை காப்பாள்...

21. இயற்கை காப்போம் 

இயற்கை அன்னை காப்பாள் உன்னை 
நேசம் கொண்டிடு இயற்கையோடு 
தேசம் வாழுமே இளமையோடு
காற்றே. . . காற்றே . .. பூங்காற்றே 
காடுகள் தருமே உயிர்காற்றே 
 மூங்கிலில் நுழைந்தால் இசையாவாய் 
மூக்கினிலே  நுழைந்தால்  உயிராவாய் 
எங்கும் எதிலும் உன்னாட்சி  - மனிதா
உன்னிலில்லை [யோ] மனசாட்சி
மலையுச்சியில் நீ பிறக்கின்றாய் 
மண்ணின் மடியில் தவழ்கின்றாய் 
மழையாய் நீயும் பொழிகின்றாய் 
மக்கள் தாகம் தீர்க்கின்றாய் 
நீரே  நீரே இல்லையெனில்  - நிஜமாய் 
நாங்கள் அகதிகளே
இயற்கையில்  இணைந்தால் இன்பந்தானே
செயற்கையில் வருவது துன்பம்தானே
நெகிழியால் உலகம் அழியுதடா
நினைவில் இதையும் நீ கொள்ளடா
வாடா வாடா  காத்திடுவோம் 
புதிதாய் பூமியை  மாத்திடுவோம்!!
மு. ஏழுமலை
   9789913933




பதிவு : மு ஏழுமலை
நாள் : 5-Mar-19, 2:55 pm

மேலே