எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

28 . இசையே நீயடி [பாடல்] நீ. ....

28. இசையே   நீயடி [பாடல்] 

நீ. . . . . வசையாய் ஆனாலும்
கசையாய் ஆனாலும்  - உன்னை 
இசையாய் இசைப்பேனடி 
ஆசை அம்புலியே - என் 
காதல் பொய் இல்லையே 
கட்டவிழ்த்தாயே  கண்களால் 
காதல் அம்பை - காத்திருக்கிறேன் 
பெறுவதற்கு உந்தன் அன்பை 
நீயே நீயே என் ஜீவனடி
நாளும் நாளும் உன் சரணமடி 
நெஞ்சுக்குள்ள நீயும் வந்து
பஞ்சுமெத்த போட்டுக்கிட்ட
அஞ்சுகமே உன்ன பார்த்து 
ஏழு ஸ்வரம் நானும் மீட்ட 
வானவில்லாய்  வானவில்லாய் 
எந்தன் வானில் நீயடி 
காலமெல்லாம் கானமாக
எந்தன் நாவில் நீ தேனடி !
மு. ஏழுமலை

பதிவு : மு ஏழுமலை
நாள் : 9-Mar-19, 9:15 am

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே