எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

32 . இருவரும் ஒன்றே . . ....

32. இருவரும் ஒன்றே . . . 

இனிக்க இனிக்க பேசி 
இளிச்சவாயன் ஆக்குவதில் 
இருவரும் வல்லவர்கள் - சிரித்து
 சிரித்து பேசி சின்னாபின்னமாய்
சிதைப்பார்கள் இருவரும் 
கைக்காட்டி அழைத்து கடுந்துயர்
கொடுப்பர்  ஒருவர்  - மற்றவர் 
கைக்கூப்பி வணங்கி காணாத்துயர் தருவர்
பொய்யான வாக்குறுதியில் 
சகுனிகள் இருவரும் - உமக்காகத்தான் 
நானென்பர் - நீயின்றி 
நானில்லையென்றும் - உலகே வெறுக்கின் 
உனைப்பிரியேன் என்றும் சத்தியம் செய்து 
சாகடிப்பர் ஒருவர் - மற்றொருவர் 
உனைத்தேடி வந்து  உன்கால் பணிந்து 
பொய்யுண்மை பேசி சாமர்த்தியமாய்
வாங்குவான் - ஊரேற்றி வைத்தபின்னே 
உனையாரென்று கேட்டு ஊர்மத்தியில்
அவமதிப்பான்  மற்றொருவர் 
நாசூக்காய் பேசுவார் ஒருவர் 
நயவஞ்சகமாய் பேசுவார் மற்றொருவர்  
தேன்சொட்டும் தேமதுரம் ஒருவர் வார்த்தை 
தேள்கொடுக்காகும் மற்றொருவர் வார்த்தை 
ஜாடையில் மயக்குவர் முதலாமவர் 
மேடையில் மயக்குவர் இரண்டாமவர்
சொல்மணக்கும் விடம் முதலாமவர் 
புல் மறைத்த பாம்பு இரண்டாமவர் 
இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு 
இருதுருவங்கள் இணைய 
ஆம். . . . . 
முதலாமவர் காதலி 
இரண்டாமவர் அரசியல்வாதி 
தள்ளியே நில்லுங்கள் இருவரிடமிருந்தும்!!.
எச்சரிக்கையாய்
    மு. ஏழுமலை

  
 பதிவு : மு ஏழுமலை
நாள் : 13-Mar-19, 2:20 pm

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே