எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்மொழிகள் - 1 -------------------------------------- நமக்காக மட்டும் வாழ்ந்தோம்...

                    என்மொழிகள் - 1 

                  --------------------------------------
நமக்காக மட்டும் வாழ்ந்தோம் என்றில்லாமல் மற்றவருக்கும் சேர்ந்து வாழ்ந்தோம் என்பதே உண்மையான வாழ்க்கை !   ஒரு கேள்விக்குறியாக வாழ்வதைக் காட்டிலும் ஆச்சரியக் குறியாக வாழ்வதே மிக சிறப்பு !   


ஒரு கட்டுரையில் வரும் பல வாக்கியங்களில் இடையிடையே பல்வேறு குறியீடுகள் வந்தாலும் இறுதியில் முற்றுப்புள்ளி என்பது உறுதி ! அதைப்போல, வாழ்க்கை எனும் தொடரில் பல்வேறு நிகழ்வுகள் , திருப்பங்கள் , மாற்றங்கள் ஏற்பட்டாலும் முடிவு என்பது இறுதி !   


 உள்ளவரை எவரும் அடுத்தவரை உயர்த்திவிட முடியாவிட்டாலும் பரவாயில்லை , ஆனால் எக்காரணம் கொண்டும் மற்றவரை கீழே தள்ளிவிட நினைக்காதீர்கள் !    பழனி குமார்      

நாள் : 19-Mar-19, 9:11 pm

மேலே