எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு அன்பான வேண்டுகோள் ---------------------------------------------------- வாக்களிப்பது என்பது நமக்குள்ள...

  ஒரு அன்பான வேண்டுகோள் 

----------------------------------------------------

வாக்களிப்பது என்பது நமக்குள்ள ஜனநாயக உரிமை, அதிகாரம் மற்றும் சுயசிந்தனையுடன் எடுக்கும் முடிவு . ஆகவே அதனை தவற விடாதீர்கள் .யார் வரவேண்டும் ஆட்சிக்கு என்பதைவிட யார் வரக்கூடாது என்ற சிந்தனை மிகவும் ஆழமாக இருக்க வேண்டும் .யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கும் நாட்டிற்கும் என்ன பயன் கிடைக்கும் ,நடுத்தர வர்க்கம் என்ன பலன் பெறும் ,அடிமட்டத்தில் உள்ள அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாத வறுமையில் வாடும் மக்களுக்கு எப்படி பலன் கிடைக்கும் என்பதை எல்லாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் .யாரை ஆதரிப்பது என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை ,சுதந்திரம் ,மற்றும் இரகசியமும் கூட. ஆனால் எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள் .

எதிர்கால வாழ்வை நினைத்து ,வருங்கால சந்ததியினரை நினைத்து ஒரு நல்ல முடிவு எடுத்து வாக்கு சாவடிக்கு சென்று உங்களின் சமுதாயக் கடமையை ஆற்றிட தயாராகுங்கள் .நாடு வளம் பெற ,மக்கள் நலன் பெற ,சமுதாயம் தழைத்திட ஒரு தீர்க்கமான முடிவுடன் ஓட்டு எனும் ஆயுதத்தை பயன்படுத்துங்கள் .

#தேர்தல்நாள் வரும் 18.04.2019.


ஒரு தமிழனாக மட்டுமன்றி ஒரு இந்தியனாக இந்த வேண்டுகோளை வைக்கக் கடமைப்பட்டுள்ளேன் .


பழனி குமார் 
08.04.2019  

நாள் : 9-Apr-19, 6:52 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே