எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*கேடி பிரதமரானால்...?* விவசாயம் காயம் பட்டு மாயமாகி போகும்......

*கேடி பிரதமரானால்...?* 

விவசாயம் காயம் பட்டு மாயமாகி போகும்... 

சில்லரை வணிகம் கல்லறைக்குள் காணாமல் போகும்... 

கருவறை விட்டு வெளிவரும் பெண் சிசு பிணவறை செல்லும்.... 

வீட்டுக்கு வீடு பாலியல் பலாத்காரம் இலவசமாகும்... 

கல்விக் கூடங்கள் கலவிக் கூடங்களாகும்... 

இந்தியை விரட்ட தமிழ் இரத்தம் சிந்தி சாகும்... 

எரிபொருட்களின் விலை கேட்டால் வயிறு எரியும்... 

கோமியம் புனிதமாகும்... 

பச்சிளம் பிள்ளைகளின் பால் விஷமாகும்... 

வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, வட்டி மேல வட்டி கட்டி சேர்த்த செல்வம் எல்லாம் பண முதலைகளின் பசிக்கு இரையாகும்... 

ஜனவரி,பிப்ரவரி தவிர எல்லாவற்றுக்கும் வரி கட்டியே காசெல்லாம் கரியாகும்... 

கலர் கலர் கோட்டுக்கு பொருத்தமாக ரூபாய் நோட்டு அச்சடிக்கப் படும்... 

மனிதக் கறி உண்பவனை விட மாட்டுக் கறி உண்பவன் நாட்டின் விரோதியாவான்... 

சாதிகள் சல்லடையில் வடிகட்டப் படும்.. 
உயர்ந்த சாதி மேலே.. 
தாழ்ந்த சாதி கீழே த(க)ண்ணீரில் கரைக்கப் படும்.. 

மதவெறி தூண்டும் பல பாலங்கள் கட்டப்படும்... 
மனசாட்சி, மனிதநேயம் வரும் காலங்களில் வெட்டப்படும்... 

நாட்டில் வாழ்பவருக்கும் பாதுகாப்பு இல்லை.. 
நாட்டிற்காக வாழ்பவருக்கும் பாதுகாப்பு இல்லை.. 
நாட்டின் பணத்தை கோடி கோடியாய் சுருட்டி வெளிநாடு ஓடி போகும் கேடிக்கே கேடியின் பாதுகாப்பு... 


கறைபட்ட அரசை கண்டுக் கொள்ளாமல் விட்டால் சிறைப் பட்ட பின் முறையிட யாருண்டு..? 

பொறிக்கப்படும் உன் "மை"(உண்மை) தவறாகி போனால்.. 
பறிக்கப்படும் உன் உரிமை... 

ஒரு விரல் புரட்சி... 
பாரதத்தின் எழுச்சி... 
கேடின் வீழ்ச்சி...👍🏻

பதிவு : மல்லி
நாள் : 9-Apr-19, 4:33 pm

மேலே