எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடியல் பிறக்கட்டும் ---------------------------------------- ஒருவழியாக தேர்தல் திருவிழா நடந்து...

விடியல் பிறக்கட்டும் 
----------------------------------------

ஒருவழியாக தேர்தல் திருவிழா நடந்து முடிந்தது .ஆனாலும் இதில் முழுமையாக அனைவரும் பங்கேற்கவில்லை என்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகிறது, அதுவும் சென்னையில் மிகவும் குறைவான அளவே வாக்குப்பதிவு நடந்துள்ளது என்பது வருத்தம் அளிக்கிறது .இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில மூத்த மிகவும் முதிர்ந்த நிலையில் உள்ள அரசியல் தலைவர்களும் , பெரியவர்களும் பொறுப்புடன் வந்து முடியாத நிலையிலும் தங்கள் கடமையை ஆற்றியது சிலிர்க்க வைத்தது .

அதற்கு காரணங்கள் பல இருக்கலாம் .ஒரு சிலர் ஓட்டுப் போடுவதையே விரும்பவில்லை என்கின்றனர் பெருமையாக .ஒரு சிலர் கடுமையான வெய்யில் காரணம் என்று கூறுகின்றனர் .(ஆனால் அவர்கள் திரைப்படம் காண முதல் நாள் முதல் காட்சிக்கு அதிகாலையில் இருந்து காத்துக் கிடப்பவர்களும் உண்டு என்பதை மறுக்க முடியாது , ம்ம்ம்ம்ம் .) ஒரு சிலர் அரசியலே வெறுத்து விட்டது என்று கூறுகின்றனர் .பலருக்கு பூத் ஸ்லிப் (BOOTH SLIP ) வழங்கப்படாததால் அங்கு சென்றும் வாக்கு அளிக்க முடியாமல் திணறியும் உள்ளனர் திரும்பியும் உள்ளனர் ,அரசும் தேர்தல் ஆணையமும் பதில் கூற வேண்டும் .அவர்களின் பொறுப்பற்ற அல்லது வேண்டுமென்றே செய்த செயலின் விளைவே அது .


ஓட்டு எண்ணிக்கைக்கு அதிக காலம் இடைவெளி என்பது சில ஐயங்களை பலருக்கும் உண்டாக்குகிறது .எது எப்படியோ ,முடிவு வந்தால் நமது வாழ்வின் முடிவும் தெரிந்துவிடும் .பல அரசியல்வாதிகளின் எதிர்கால முடிவும் வெளிப்படும் .சில கட்சிகள் அஸ்தமனமும் ஆகலாம் , சில கட்சிகளுக்கு புது வாழ்வின் தொடக்கமும் ஆகலாம் .காலம் பதில் கூறும் வரை காத்திருப்போம் .

நாடும் நாமும் என்றும் நலமாக ,வளமாக , நிம்மதியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சியே .நல்லது நடந்தால் நமக்கெல்லாம் நன்மைதானே !

விடியல் பிறக்கட்டும் ,தீவினைகள் மறையட்டும் , நல்வினைகள் மலரட்டும் ,
இதயமும் இல்லமும் இந்நாடும் இன்பம் அடையட்டும் !


பழனி குமார் 
19.04.2019  

நாள் : 19-Apr-19, 8:29 am

மேலே