எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தி எதிர்ப்பும் திணிப்பும் ! -------------------------------------------------- இந்தி கற்பது...

இந்தி எதிர்ப்பும் திணிப்பும் !
--------------------------------------------------


இந்தி கற்பது என்பது வேறு. திணிப்பது என்பது வேறு. முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும்.பிற மொழிகளை கற்பதில் எந்த தவறும் இல்லை. அது உதவியாக இருக்குமே தவிர அதனால் உபத்திரவம் இருக்காது. 

ஆனால் ஒருவர் மீது கட்டாயம் கற்க வேண்டும் என்பதும், அவ்வாறு திணிக்கப்படுவதும் தான் தவறு.தமிழ் ,ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் கற்கலாம் என்பது வேறு, இந்தியை தான் கற்க வேண்டும் என்று கூறுவது தவறு. நான் படித்த காலத்தில் இருந்து எங்கள் பள்ளியில் இந்தி கற்க விரும்புபவர்களுக்கு என்று தனியாக இந்தி வகுப்பு உண்டு. நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஊர்வலத்தில் சிறு வயதில் கலந்து கொண்டேன். நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நண்பர்களுடன் தனியாக ஒரு ஆசிரியரிடம் இந்தி கற்க சேர்ந்தேன். எனக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் ஒருவாரம் கழித்து ஒதுங்கிக் கொண்டேன். இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை.


நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தித் திணிப்பை கடுமையான முறையில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
அதேபோல ஆந்திராவிலும் , கர்நாடகாவிலும் எதிர்ப்பு எழுந்தது. அதுவும் சட்டம் மூலமாக அரசாங்கம் கட்டாயப்படுத்துவது என்பது இனமொழி வெறியை ஆட்சியாளர்கள் தூண்டி விடுவதாக ஆகிவிடும். அவர்கள் இதனை சிந்திக்க வேண்டும்.

நிச்சயமாக வேறு மொழியை கற்றுக் கொள்வதால் சாதகம் உண்டு. பாதகம் இல்லை. அறிந்து கொள்வதில் தவறில்லை.மாமிசமே முற்றிலும் சாப்பிடாதவர்களை கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று திணிக்க முடியுமா ? நாமும் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா...?
பலரும் அதில் எவ்வளவு strong ஆக இருக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரியும்.ஆனால் அதே நேரத்தில் மற்றவர்கள் நமது குடும்பத்தில் வெளியே சென்று சாப்பிட்டால் அதை கண்டிப்பதில்லை. எதிர்ப்பதும் இல்லை. அவரவர் விருப்பம் என்று நினைக்கிறோம். அதேபோல தான் இதுவும். இப்படித்தான் யோசிக்க வேண்டும்.


என் மனதில் பட்டதை வெளிப்படையாக இங்கு பதிவு செய்கிறேன்.தவறா சரியா என்பதை நீங்கள்தான் கருத்து கூற வேண்டும்.

பழனி குமார் 
04.06.2019  

நாள் : 4-Jun-19, 2:24 pm

மேலே