எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பருப்பு தண்ணியில் ஞாயிறு மிதக்கிறது கறியென்றால் சாதி மெதிக்கிறது...

பருப்பு தண்ணியில்
ஞாயிறு மிதக்கிறது

கறியென்றால்
சாதி மெதிக்கிறது

மதம் மனிதனை
மூத்திரம் நக்கசொல்கிறது

குடிக்க நீர்கூட இல்லை
மொக்கெங்கும் சாராயக்கடை

நிலம் முதல் நீட்வரை
உயிரையே பறிக்கிறது

உரிமையென பேசினால்
வீட்டுக்காரனே பைத்தியமென்கிறான்

அம்பேத் பெரியார் மார்க்ஸ் எல்லாம்
நூலக புழுதியில் மங்கி கிடக்கு

மனுவும் பழைய கதையும்
தெருவை மேல் கீழென பிரித்துவைத்திருக்கு

ஆடு மாடாய் உழைக்கும்
எம்மக்கள் மனிதராய் எப்போது மதிக்கபோகிறார்களோ

தூய்மை தூய்மையென குப்பைத்தொட்டி
இழுக்கும் அவலம் எப்போது தொலையுமோ

படிப்பு விளையாட்டு உரிமை உணவு
அரசியல் இப்படி எதுவும் நுகராத

எம்மக்களை எப்போது சிந்திக்கவிட
போகிறதோ இந்த சமூகம்...

பதிவு : cheguevara sugan
நாள் : 9-Jun-19, 1:27 pm

மேலே