எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்...

நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பழங்குடி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.


பெற்றோர்கள் கூறுகையில், "பள்ளிக்குத் தலைமையாசிரியர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே வருகின்றனர். காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து, மாலையில் தேசியகீதம் பாடுவதில்லை. தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களே சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.10 மணிக்கு வரும் ஆசிரியர்கள், 2 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுகின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியில், பட்டியலில் உள்ள உணவுகளை வழங்குவதில்லை. விடுதிக் காப்பாளரும் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

நாள் : 10-Jun-19, 5:49 pm

மேலே