எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​கிரிக்கெட் போட்டியும் இந்திய ஒருமைப்பாடும் --------------------------------------------------------​ ​நேற்று(09.06.019) நடைபெற்ற...


​கிரிக்கெட் போட்டியும் இந்திய ஒருமைப்பாடும் 

--------------------------------------------------------​

​நேற்று(09.06.019) நடைபெற்ற உலக அளவிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் , ஆஸ்திரேலியாவும் மோதியதும்  அதில் இந்தியா வெற்றிபெற்றதும் நாம் அனைவரும் அறிந்ததே. ​உண்மையில் நமது அணி வீரர்கள் மிகவும் ஈடுபாடுடன் அக்கறையுடன் முழுமூச்சோடு வெற்றியை இலக்காக வைத்து விளையாடியது பாராட்டத்தக்கது . இந்திய அணிக்கு என் வாழ்த்துகள் ஒரு இந்தியன் என்ற முறையில் மட்டுமல்லாது ஒரு ரசிகனாகவும் . 


​ஆனால் நான் கூற வந்தது அதுவல்ல , அந்த இறுதி கட்டத்தில் , கடைசி அரைமணி நேரத்தில் உலகத்தில் உள்ள அனைத்து இந்தியனும் , தேசப்பற்றோடு , தாய்நாட்டு உணர்வோடு மிகவும் பதட்டமாக ​இருந்தார்கள் என்பதை மறுக்க முடியாது . அதுதான் நமது நாட்டின் ஒருமித்த எண்ணமும் , என்றும் நிலைத்த , மக்களின் மனங்களில் ஆழமாக ஊன்றியுள்ள தேசிய உணர்வுதான் காரணம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது . அதற்காக நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .அனைத்து இந்திய உள்ளங்களுக்கும் தலைவணங்குகிறேன் . இது உலகிற்கு நாம் காட்டும் ஓங்கிய ஒற்றுமை உணர்வு . 

அதேநேரத்தில் , நமது நாட்டிற்குள் பல விஷயங்களில் , குறிப்பாக தேர்தல் களங்களில் மற்றும் காதல் திருமணங்களில் , மேலும் பண்டிகை அல்லது விழாக்களில் மட்டும் ஏன் சாதி, சமயம் என்று பிரித்துப் பார்க்கிறோம் . அதைவைத்து பிரிந்து கிடக்கிறோம் .சாதி மதங்களை வைத்து நமக்குள் பகையை உருவாக்கி வளர்க்கிறோம் ? அரசியலில் அது விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை . அது ஓட்டு வங்கிக்காகவும் , சுயநலத்திற்காகவும் , பதவி வெறிக்காகவும் என்பது உண்மை . ஆனால் ஒரு சிலரின் தனிப்பட்ட வாழ்விலும் , குடும்பத்திலும் , போலி கௌவரவத்திற்காகவும் மட்டுமே அதை பயன்படுத்துவது ஏற்க முடியாது.   


நிரந்திரமில்லா வாழ்க்கையில் , முடிவறியா இறுதிநாள் வரை அவரவர் இந்த சாதி மதத்தை மறந்து , ஒரு மனிதனாக வாழ முடியாதசமுதாயம் தான் இங்கே உச்சத்தில் இருக்கிறது . இந்த கிரிக்கெட் போட்டியை ஒரு உதாரணமாக வைத்து நாம் அனைவரும் இந்தியர் எனபதை மனதில் கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் . எந்த  ஒரு கட்சியும் ஆட்சியும் குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ குறிவைக்கவும் , அதுவே கொள்கையாகவும் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. 

அது இந்திய ஒருமைப்பாட்டிற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . அதேபோல் அவரவர் தமது தாய்மொழிப் பற்றும் எள்ளளவும் குறைதல் கூடாது .

​​    
  பழனி குமார்               

நாள் : 10-Jun-19, 10:11 pm

மேலே