எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து இணையத் தமிழ் இதழிற்கு நீண்ட நாட்களுக்குப் பின்...

எழுத்து இணையத் தமிழ் இதழிற்கு நீண்ட நாட்களுக்குப் பின் வருகிறேன். இருப்பினும் இதன் இணையப் பக்க வடிவமைப்பில் ஒரு சில மாற்றங்களைத் தவிர அடிப்படை மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை! அதிலும் குறிப்பாகத் தமிழ்க் க்விதைப் பிரிவில் ஆழமிக்க கவி இலக்கணப் படியான கவிதைகளைக் காணமுடியவில்லை.கருத்தைச் சொல்வதற்கு வெறும் உரைநடை போதும் அல்லவா? புதிய கவிஞர்களை ஆதரிக்க வேண்டும்தான். ஆனால் அது "என்னுடைய இந்த எழுத்து, ஒரு கவிதைதான்" என்று சொல்லிக் கொள்வதாலேயே அந்த எழுத்துக் கோர்வை கவிதை ஆகாது என்பதையும் புரிய வைத்து, ஆர்வத்துடன் இணையத் தமிழில் புகும் ஆர்வலர்களை வழிப் படுத்த வேண்டும். இது இந்த இணையத் தள் நெறியாளருடைய பணி. இசையும் தாள ஓசையும் சந்தமும் இல்லாமல் எதுகை மோனைகளை முறையாகக் கையாளாமல் நாம் இளம் கவிஞர்களை ஒரு அவசர வழியில் அனுப்புவது ஏற்புடையது அல்ல.


இணைய தளப் பக்க அமைப்பும் பெரும் குழப்பத்தைத் தருவதாக உள்ளது. தொடர்புக் கண்ணிகள் (Hyper  Links) ஒன்றே பல இடங்களில் அமைக்கப் பட்டுள்ளதால் நான் இப்போது எங்கிருக்கிறேன் என்பது தெரிவது இல்லை. பக்கங்களில் உலாவலை எளியதாக்க ஒரே பக்கத்தில் பல கண்ணீகளையும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிக்க நன்றி. வணக்கம்.
சந்திர் மௌலீவ்வரன் ம கி,
auztrapriyaa@gmail.com 
12 ஜுன் 2019. செவ்வாய்.

நாள் : 12-Jun-19, 11:35 pm

மேலே