எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா தொப்புள்கொடி உறவுக்கு உயிர் தந்து நான் அழுது...

                         அம்மா

தொப்புள்கொடி உறவுக்கு
உயிர் தந்து
நான் அழுது நீ சிரிக்க!!!
நித்தமும் காத்தாயே அம்மா!!!

நான் பேசிய முதல் மொழிக்கு 
300 முத்தம் கொடுத்தயே அம்மா!!!

ஊர் கண்பட பயந்தாயே!!!
என் கன்னக் குழியில் 
உன் கை பட்டு,
கரு மையில் மறைத்தாயே அம்மா!!!

என் பசியாற்ற ஓடிய கணத்தில் உன் பசியை மறந்தாயே அம்மா!!!

நான் உன்னிடம் வெறுப்பை உமிழ்ந்த துண்டம்மா!!!

சொல் பேச்சை மறுத்ததுண்டம்மா!!!

  காதுபட கோபத்தில் திட்டியதுண்டம்மா!!!

ஆனால், என் கண் கலங்க நீ அழுதாயே!!

அந்தக் கண்ணீர் முன்னாள் 
என் தவறு பிழையானதே அம்மா!!!

நி கண்ட கனவை 
நான் வாழ
பார்க்காமல் சென்றாயே பார்க்க முடியாத இடத்திற்கு!!!!

விதி மீது பழி போட வா!!!

படியேறிச் சென்று வேண்டிய வேலனுக்கு வினா போடவா!!!

என் நிழல் இல்லாமல் வாழச்சொல்லி
மதியை பழக்க சொல்லவா!!!!

நீ கொடுத்த முதல் பரிசுக்கு பதில் பரிசு தரணும் அம்மா!!!

ஊர் முழுக்க சுத்திக்காட்டி, உன் கால் வலிக்க செய்யனும் அம்மா!!!

ஒய்யாரமா நீ ஊஞ்சலாட அதை நான் பார்த்து ரசிக்கணும் அம்மா!!!

ஒரு வாய் சோறு ஊட்ட மறுவாய் நீ மறுக்க, அடம்பிடித்து சாதிக்க ஆசை அம்மா!!!

எல்லாம் கனவாய் போனதே!!!!

மறுபிறவியில் நினைவாக்க உன் நினைவில் நான்!!!!

என் வாழ்க்கையின் தொடக்கப் புள்ளியும், இந்தக் கவிதையின் முற்றுப்புள்ளியும் நீ அம்மா!!!!!

பதிவு : Saravanan
நாள் : 27-Jun-19, 10:30 am

மேலே