எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கண்ணின் மணி போல என்னை கருவறையில் காத்தவளே! பூமிக்கு...

கண்ணின் மணி போல என்னை
கருவறையில் காத்தவளே!
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா!
பெண் என்ற கலக்கமா
பெற்றவளே உன் நெஞ்சில்!
கள்ளமில்லா என் தாயே உன்
உள்ளம் நினைப்பதென்ன!
நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா!
கள்ளி பால் வார்த்து
கல்லறை படைக்கவா!
வேண்டாம் தாயே
விபரீத எண்னம்!
அள்ளி அணைக்க மனமில்லை!
என்றால் அரசு தொட்டிலில்
போட்டுவிடு!

பதிவு : Cute
நாள் : 8-Jul-19, 12:56 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே