எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வதைக்கும் வெயில் ஒருபுறம் வாடிடும் உயிர்கள் ஒருபுறம் சிதைந்த...

வதைக்கும் வெயில் ஒருபுறம்

வாடிடும் உயிர்கள் ஒருபுறம்
சிதைந்த சமுதாயம் ஒருபுறம்
சீரழியும் தலைமுறை ஒருபுறம் ...

இதற்கிடையில் ,


மதவெறி பிரச்சாரங்கள் ,
சாதிக்கானப் போராட்டங்கள் ,
ஆணவக் கொலைகள் ,
பழிதீர்க்கும் படலங்கள்,
வெறுப்பு அரசியல் ,
மாற்றுமொழித் திணிப்பு ,
பாலியல் வன்முறைகள் ,
பயனில்லா பட்ஜெட் ,
வாக்களித்தவர்க்கு வாய்க்கரிசி
ஏற்றம் பெறா ஏழையினம் ,
என்றும் தத்தளிக்கும் நடுத்தரம் ,
கரையும் தாய்மொழிப் பற்று ,
மறைந்த ஒற்றுமை உணர்வு ,
மண்ணில் மரணித்த மனிதம் ,
அழியும் இயற்கையின் ஓலம் ,


இந்நிலை தொடர்ந்தால்,


நம் வாழ்க்கையின் முடிவு ?
அடுத்த தலைமுறையின் நிலை?
மாற்றம் பெற்றிட வழிவகை ?


விடை தெரியாத வினாக்கள் !


பழனி குமார்
10.07.2019  

நாள் : 10-Jul-19, 1:44 pm

மேலே