எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பேருந்து திரிப்பில் காத்திருகப்போது கண்கள் வர்ணிக்க தொடங்கியது குப்பையுடன்...

பேருந்து திரிப்பில் காத்திருகப்போது

கண்கள் வர்ணிக்க தொடங்கியது

குப்பையுடன் குப்பையாய்

அள்ளி தெளித்த குப்பைக்களுக்கு

இடையே குப்பையாய்

கிழிசலும் கிழிந்த புடவையின்

மத்தியில் தன் உடலை மறைக்கப்பாடுப்பட்ட அந்த உயிரற்ற உயிர் வாழ்கிற அக்கிழவின் தலைக்கு மேல்

முதியோர் இல்ல விளம்பரப்பலகை


சக்கடை நீருக்கும் குடிநீருக்கு

வித்தியாசமற்ற அந்த பஜ்ஜி கடையின்

தேநீரில் மிதந்த ஈக்கு

என் ஆழ்ந்த இரங்கல்....!!!!


நவநாகரீக மாடர்ன் யுவதிகளின்

Perfume வாசத்திற்கு நடுவே

தன்னை வாங்க சொல்லிய

மல்லிகை சரத்தின் விளம்பரமல்லா

நறுமணம் அந்த நாற்றத்தின்

மத்தியில் நாசிகளுக்கு பரிசாய்!!!!


யாரோ  இடித்து விட ரசனை தடைப்பட்ட

கோவத்தில் திட்ட முற்படுகையில்

என் கண்ணாடி கண்களுக்குள்ள தெரிந்த

அந்த இருதயமற்ற பிம்பம் என் கண்முன்னே நிழலாடியது

கண நேரம் நடத்த இடிப்பாட்டில்

நோருங்கிய என் இதயம்

மேலும் ஓர் பூகம்பத்தில்

சிக்கி சுக்குநூறானது!!







நடக்க கால்கள் எத்தனித்தப் போது

யாரோ என் பெயர் சொல்லி அழைக்க

அவன் மகளை அழைத்திருத்தான்

என்னையல்ல..அவளை கன்னத்தில் முத்தமிட்டான் கண்கள் என்னை நோக்கியவாரு...


அவனுக்காக மையிட்டு அதே

விழிகள் இன்று வலி சுமகிறது

ஏங்க வாங்க போகலாம் அவன் திருமதியின் கூக்குரல் போலும்

எங்கள் முன்கதை சுருக்கம்

தெரிந்து இருந்தால் காளி அவதாரம்

புண்டுயிருப்பாள் ஹாஹாஹா


முதிர்கன்னியாய் முதிர்கிறது

முதிர்க்கப்பட்ட வாழ்க்கை

முறிவை நோக்கி நரைத்த

தலை மயிர்யின் வானெல்ல தன்னம்பிக்கையில்




பதிவு : Karkuzhali31
நாள் : 21-Aug-19, 9:01 am

மேலே