எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கேள்விக்குறியாக தெரிகிறது -------------------------------------------------------- அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், ஆதிக்கச்...

  கேள்விக்குறியாக தெரிகிறது  
--------------------------------------------------------

அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், ஆதிக்கச் சக்திகள், ஆட்பலமும் பணபலமும் கொண்ட கூட்டம், சமூகத்தை​ச் சீர்குலைக்க நினைத்து ஆயுதம் ஏந்தி வலம் வந்து கொண்டிருக்கும் தீயசக்திகள், இப்படி பலரும் தம்மிடம் அனைத்தும் இருக்கிறது என்ற இறுமாப்பில் மிதந்து திரிகிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணம் என்றும் நிலைக்காது​ என்பதை உணரவில்லை . நிரந்திரமிலா வாழ்வில் ஏதும் நிரந்திரமில்லை என்பதும் அவர்களுக்கு புரியவில்லை .

இவர்களால் நாட்டுக்குக் கேடுதானே தவிர நன்மைகள் ஏதுமில்லை. இது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் அறிந்த உண்மை . ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. நாம் காணும் இன்றைய நம்நாட்டு பொருளாதார சூழ்நிலையும் , அனைவரும் ஏதோ ஒரு வழியில் அல்லல்படும் நிலையும் நம்மை ஏக்கமுடன் கலங்கிடவும் வைக்கிறது . ஆழ சிந்தித்துப் பார்த்தால் , அடுத்த தலைமுறையின் நிலை இன்னும் பரிதாபத்துக்குரியது. மேலும் வலியை உண்டாக்குகிறது . ஆனால் இதனை இன்றைய வளரும் இளைய சமுதாயம் சிந்திக்க தவறுகிறது என்பது கொடுமையான ஒன்று.சிலர் இன்றைய பொழுது கழிந்தால் போதும் என்கிற மனப்பான்மையிலும் , வேறு சிலர் நாம் ஏன் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டுமென பொறுப்பின்றிப் பேசுவதும் அவர்களின் அறியாமையை காட்டுகிறது . 


இவ்வுலகில் வந்தப்பிறந்த நாம் அனைவரும் தான் வாழப்போகும் காலத்தை அறியோம். வாழ்ந்த காலத்தில் நாம் பண்பாட்டுடன் , சீரிய எண்ணத்துடன் , நாம் மட்டுமன்றி மற்றவருக்கும் பயனுள்ளதாக அமையும்படி வாழ்ந்துக் காட்டுவதும் , அதற்கேற்ப செயல்படுவதும் தான் வாழ்வியல் அறம் என்பதை உணர வேண்டும் .


சுழன்றுக் கொண்டிருக்கும் சுயநல பூமியில் வருங்காலம் என்பது வளைந்து குனிந்துக் கொண்டிருக்கும் (?) கேள்விக்குறியாக தெரிகிறது , நிமிர்ந்து நின்றிடும் ( ! ) ஆச்சரியக் குறியாக மாறிட வேண்டுமென்பதே எனது ஆவல் .


​பழனி குமார் 
26.08.2019

நாள் : 26-Aug-19, 9:36 am

மேலே