எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலமும் வாழ்க்கையும் ..எனது பார்வை ​ ----------------------------------------------------------------- காலத்தின்...

காலமும் வாழ்க்கையும்  ..எனது பார்வை ​
-----------------------------------------------------------------
காலத்தின் வேகத்தைக் கணக்கிட முடியாது என்பது எத்தனை உண்மை .கடந்த கால நிகழ்வுகளை  "அந்தக் காலத்தில் " என்று நாம் பேசுகிறோம். வருங்காலத்தில் நாம் வாழ்ந்தக் காலத்தையும் அப்படித்தான் அடுத்த சந்ததியினர் பேசுவார்கள் . 

நம்மைக் கடந்து செல்லும் நேரத்தையும் நாட்களையும்  தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தாம் வாழும் காலத்தில், நேரத்தை விரயமாக்குவதும், வீணாக்காமல் பயனுள்ளதாக மாற்றிக் கொள்வதும் நம் கையில் தான் இருக்கிறது. 

எவரும் தனக்கு வயது கூடியிருப்பதை வயதை வைத்து கணக்கிட்டாலும், நாம் பார்த்து பிறந்த பலர் வளர்ந்து ஆளாகி பெரியவர்களாக கண்ணெதிரே நடமாடும் போது தான், நமக்கு முதுமை நெருங்குவதையும் பல ஆண்டுகள் கடந்து சென்று விட்டது என்பதை உணர்கிறோம். இது யதார்த்தம் .

ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில் எதை விட்டுப் போகிறோம் ...உறவுகளையும் நட்புகளையும் எண்டார்களும் கூட எவ்வளவு கலாம் அவர்கள் நம்மை நினைக்கப் போகிறார்கள் அல்லது பேசுவார்கள் என்று தெரியாது . அதே நேரத்தில் நாம் வாழும் காலத்தில் நற்காரியங்கள் மட்டும் செய்தாலும் , ஏதோ ஒரு துறையில் கால் பதித்து , அதில் உயர்ந்த நிலையை அடைந்து இருந்தாலும் பலரும் நம்மை எதிர்காலத்தில் நினைக்க ,பேசிட வாய்ப்பு உண்டு . 

அந்தவிதத்தில் தான் , எனது ஞானத்திற்கு எட்டிய வரையில் , இலக்கண இலக்கியம் அறியாதிருந்தும் , ஏதேதோ எனக்குத் தெரிந்ததை , மனதில்பட்டதை பதிவு செய்து வருகிறேன் . இதுவரை " உணர்வலைகள் " , " நிலவோடு ஓர் உரையாடல் "  மற்றும் " மனம் தேடும் மனிதம் " என்ற கவிதை தொகுப்புகளை வெளியிட்டேன் . 

இன்னும் வெளியிட பலநூறு கவிதைகள் இருக்கிறது வெளியிட . வாய்ப்பும் காலமும் உடல்நிலையும் உதவினால் மேலும் எனது தொகுப்புகளை வெளியிட எண்ணம் இருக்கிறது . பலவித தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளாக சுமார் 200 எழுதியுள்ளேன் . இதை கூறுவது தற்பெருமைக்காக அல்ல, சுய விளமபரமும் அல்ல . 

நான் வாழ்ந்து முடிந்தற்கான தடயங்கள் , என்னைப் பற்றிய நினைவுகள் அனைவரின் நெஞ்சில் பதிய வேண்டும் என்ற காரணமும் விழைவுமேத் தவிர வேறல்ல . மற்றவர்களுக்கும் ஒரு தூண்டுகோலாக அமையும் , சிந்திக்க வைக்கும் என்பது எனது நம்பிக்கை .

பழனிகுமார் 
 01.09.2019

நாள் : 1-Sep-19, 2:34 pm

மேலே