எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சந்திராயன் 2 ***************** சந்திரனை ஆள வருகிறான் எங்கள்...

சந்திராயன் 2 
*****************

சந்திரனை ஆள வருகிறான்
எங்கள் சந்திராயன் 2 !

பத்து வருட முயற்சி
பயனளித்தது இன்று , 
இஸ்ரோ  பிரம்மாக்களின்
விரல்களில் பிறந்த
விங்ஞான  வித்து அவன் !

மண்ணின் மைந்தனாகிய
சிவனின் சக்தியால்
வீறு கொண்டு எழுந்தான்
புவியின் மைந்தன் !

அடி நிலவு பெண்ணே, 
உன் மீது கொண்ட தீராக் காதலால்
வலம் வரும் அவனை
வதைக்காதே ..

விண்ணை எட்டிய எங்கள் வீரனால்
உன் மண்ணை எட்ட
எவ்வளவு நேரம் ஆகிவிடும் ?

உன் இதயக் கதவை திறந்திடு 
அவன் வந்து இளைப்பாற !

உன் பரந்த இதயத்தில்
அவனுக்கொரு இடம் குடு ,
பூலோகமே உன் புகழ் பாடும் !

காத்திரு , வழிமேல் விழிவைத்து
என்றேனும் ஒரு நாள் வந்தடைவான்
எங்கள்  மண்ணின் மகன்  
வான்மகளாகிய  உன் மடியில் தவழ !!

பதிவு : Aruna
நாள் : 17-Sep-19, 11:38 pm

மேலே