சுமை !! யாருக்கில்லை சுமை ?? உண்மை மனமோ...
சுமை !!
யாருக்கில்லை சுமை ??
உண்மை மனமோ
உற்றவளுக்கு சுமை !
உதவ வில்லையென்றால்
உறவினருக்கு சுமை !!
தூக்கம் கெட்ட மனிதனுக்கு
துக்கம் தான் சுமை !
துன்பத்திலே சந்திக்கும்
துரோகம் தான் சுமை !!
பருவம் தொட்ட பெண்ணுக்கு
பத்துக் காசு செய்யக் கூட
துப்பில்லாத அப்பனுக்கு
"துட்டு" தானே சுமை !!
தற்குரிப் பிள்ளையால்
தாயிற்கு சுமை !
தள்ளாடும் வயதிலே
தனிமை கூட சுமை !!
இல்லாமை என்பது
இளமைக்கு சுமை !
இயலாமை ஒன்றுதான்
இனிமைக்கு சுமை !!
யாருக்கும் சுமையாக நானில்லை
யென்று தன்னிறைவில்லாதவனுக்கு
தன் மனமே சுமை !!
யாருக்கில்லை சுமை ???
சுமைகளை சுமந்து செல்லுங்கள் !
சுமையாக அல்ல !!
சுகங்களாக !!