எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக , யார் பிரதமராக...

  பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக ,
யார் பிரதமராக அல்லது குடியரசு தலைவராக இருந்தாலும் ,நமது நாட்டு மரபுப்படி எந்த நாட்டு தலைவர்களாக அல்லது மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் நம்நாட்டுக்கு அரசு முறையாக வரும்போது , தலைநகர் டெல்லியில் உள்ள தலைவர்களை மட்டுமே சந்தித்து பேசுவதும் , ஏதாவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதும் இயல்பாக இருந்தது . நமக்கும் அதை பார்த்து பழகிவிட்டது



ஆனால் முதல்முறையாக , நமது பிரதமர் மோடி அவர்களும் , சீன அதிபர் ஜி சின்பிங் அவர்களும் நமது மாநிலத்தில் அதுவும் மாமல்லபுரத்தில் சந்திக்க இருப்பது நமக்குப் பெருமையும் மகிழ்சசியும் தரக்கூடிய ஒன்றுதான் மறுக்கவில்லை . வரலாற்றில் பதியக்கூடிய ஒரு நிகழ்வு .அதற்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்து மகாபலிபுரத்தை சீரமைப்பதிலும் அழகு செய்வதிலும் தேவையான ஒன்றுதான் . தவறில்லை . பல கெடுபிடிகள் . போக்குவரத்தில் இரண்டு நாட்களுக்கு பெரிய மாற்றங்கள் . நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியவை தான் .அந்த சந்திப்பால் நமது நாட்டிற்கு பல நல்ல காரியங்களும் , சீனாவில் இருந்து பலகோடி ரூபாய்கள் மதிப்பில் தொழில் முதலீடுகள் வந்தால் மிகமிக மகிழ்ச்சி . 


நமக்கு எதிரியாக நினைத்த சீன நாடு நம்மைத்தேடி அதுவும் தமிழ்நாட்டிற்கு வந்து செல்வதும், பல திருப்பங்களை நிகழ்த்துமானால் வரவேற்கக்கூடியவை பாராட்டக்கூடியவை .ஒரு இந்திய குடிமகன் என்ற முறையிலும் அதைவிட தமிழன் என்ற முறையிலும் முழுமனதோடு இந்த சந்திப்பை வரவேற்று மகிழ்கிறேன் அரசியலுக்கு அப்பாற்பட்டு . 



எனக்கும் ஆளும் மத்திய அரசின் கொள்கைகளும் , பின்புலமும் , இந்தித்திணிப்பு , நீட் தேர்வு , வேலைவாய்ப்பு முறையில் வடமாநிலத்தவர்க்கு முன்னிரிமை போன்ற பல காரியங்களுக்கு எதிரியாக இருந்தாலும் அதை எல்லாம் இரண்டு நாட்களுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு இந்திய பிரதமரையும் சீன அதிபரையும் வரவேற்போம்.



பழனி குமார்
10.10.2019  

நாள் : 10-Oct-19, 7:17 am

மேலே