எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கை எனும் புத்தகம் பலவித அத்தியாயங்களை உள்ளடக்கியது. நிகழ்வுகளின்...

வாழ்க்கை எனும் புத்தகம் பலவித அத்தியாயங்களை உள்ளடக்கியது. நிகழ்வுகளின் தொகுப்பும் மற்றும் நிதர்சனமான கருத்துக்களும் அதன் பக்கங்கள். இதுதான் காலம்காலமாக பலரும் கூறுகின்ற ஒன்று .



ஆனந்தம் , சோகம் , மகிழ்ச்சி , வருத்தம் , இன்பம் , துன்பம், அதிர்ச்சி , ஆபத்தான நிகழ்வுகள் , அதிரடியான மாற்றங்கள், மற்றும் எதிர்பாரா ஆச்சரியங்கள் என பலவும் நிறைந்தது . அவை யாவும் இயற்கையின் செய்கை எனது பார்வையில் , அல்லது அவரவர் விரும்பி, நம்பிக் கூறப்படும் வார்த்தைகள் , மற்றவர்கள் நோக்கில்

ஆனால் ஒருமுறையேனும் நாம் ஒவ்வொரு காலகட்டத்தில் , இடையிடையே, வாழ்ந்து முடிந்ததை , நடந்துவந்த பாதையை , ஏற்பட்ட நிகழ்வுகளை , நம் வாழ்வில் உருவான மாற்றங்களை நினைத்து பார்ப்பதும் (அல்லது) திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்றே நினைக்கிறேன் . ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம் . அப்படி நாம் செய்திருந்தால் நம்மை நாமே மாற்றிக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் நிச்சயம் .


சில நேரங்களில் அவ்வாறு நினைக்கும்போது , சில காரியங்களை வேறுமாதிரி செய்திருக்கலாம் என்றும் , தவறு செய்துவிட்டோமா என்றும் நம் மனதில் எண்ணங்கள் தோன்றும். அது தவறல்ல . அதாவது நம்மை நாமே சுய பரிசோதனை செய்வது நல்லது என்பது எனது கருத்து.


அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் செய்தால் சமுதாயத்தில் நன்மைகள் உருவாகி ஒரு மௌன புரட்சி மூலம் பல மாற்றங்கள் நிகழ்ந்து , அதன் மூலம் மனித நேயம் தழைத்து , நீதி , நேர்மை, சீரிய பண்பாடு மேலோங்கி , தீயவைகள் அகன்று ஓர் ஒளிமிக்க சமூகமாக மிளிர்ந்திடலாம் என்பதும் எனது கணிப்பு .வாழ்க தமிழ் ! வெல்க சமூகம் !


பழனி குமார்
16.10.2019

நாள் : 16-Oct-19, 9:37 am

மேலே