எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருக்க நிற்க, நடக்க கை கால் ஆயுதமாகி புதிய...

இருக்க
நிற்க, நடக்க
கை கால் ஆயுதமாகி
புதிய உலக
புதிய மனித
மானுடம் மனதில் ஏந்தி
ஆசுவாச நேரமின்றி
அங்குமிங்கும்
அயர்ச்சி நடை போடும்
உட்கார்ந்தாலும்
நாளையும் , நாளையையும்  
பொழுதெல்லாம் நோண்டும்,
சொந்தம் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சிதறி கிடந்தாலும்
சிதறல்கள் சேர நேரம் பிடிக்காது,
நேரம் எடுக்காது,
சிந்தனை சிக்கிக் கிடக்கும்
கடிவாளமிட்ட குதிரை போல்,
காலம் எண்ணி கால்கள் முடங்கும்.
காதல் கூட
கவனிக்க ஆள் இன்றி
கவலை நிலையில் மல்லாந்து படுக்கும்,
அப்படியே காதல் கொண்டாலும்
பாதியில் பறந்தோடும்
பந்தம் சிறகருந்து
ரெக்கை இறகாகும்.
பணம் குறிக்கோளாகும்
மனம் குறிவைத்து பேசும்
தினம் அதன் போக்கில்
முள் சுற்றி நேரம் கழியும்.
நாளோ வருடமோ
எது கழிந்ததாலும்
அதோடு சேர்த்து
எந்திர மனிதமும்
பயணித்து கழிகிறது......

நாள் : 17-Oct-19, 12:18 pm

மேலே