எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

​"தேடல்" என்பது ஒவ்வொருவர் மனதிலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வரையில்...


​"தேடல்" என்பது ஒவ்வொருவர் மனதிலும் வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வரையில் இருக்கும் . ​ ​ஒவ்வொரு காலகட்டத்திலும் , அவரவர் வயதிற்கேற்ப , வளர்ச்சிக்கேற்ப தேடலின் வடிவங்கள் மாறலாம் . தேடல் என்பது ஒருவகையில் விருப்பம் என்றே நினைக்கத் தோன்றுகிறது . என்னதான் நமக்கு தேவைப்பட்டது அனைத்தும் கிடைக்கப்பெற்று இருந்தாலும் , மேலும் ஏதோ ஒன்றை மனம் தேடுகிறது நம்மை அறியாமலும் அறிந்தும் . இது இயற்க்கையின் நிகழ்வாகவும் எடுத்துக் கொள்ளலாம் . ஒருவகையில் ஆசையின் எல்லை மீறலாகவும் இருக்கலாம் . 


அந்தத் தேடல் என்பது அளவிலா ஆசை , பணம் , பதவி மோகம் , பெயர் , புகழ் என்று  பல உருவங்களாகவும் இருக்கலாம் . ​ஆனால் நாம் எதையும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், உள்ளக்கதவை மூடி வைத்தால் , ​தேடலின் வேகமும் குறையும் , ஆசைகளும் அடங்கும் . தேகமும் நல்ல நிலையில் இருக்கும் . மனமும் அமைதி அடையும் . நிம்மதியும் நிலைத்து நிற்கும் . மகிழ்ச்சி நெஞ்சில் நிறைந்து இருக்கும் . அதுதானே நமக்கும் தேவை . பழனி குமார் 
 ​01.12.2019​  

நாள் : 1-Dec-19, 7:48 am

மேலே