எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவரிடம் கேட்டேன் என்னை விரும்புகிறாயா என் தேகத்தையா என்று?...

என்னவரிடம் கேட்டேன்
      என்னை விரும்புகிறாயா 
 என் தேகத்தையா என்று?
      என்னை என 
பதிலளிப்பான் என 
    காதலோடு காத்திருக்க
 என்னவன் கூறிய பதிலில்
       வேரற்ற மரமாய்
 வீழ்ந்தேன்!  அவன் காதலை
      கண்ணுக்குள் மணியாய்
 போற்றிப்  பாதுகாத்தேன்
        கண் திறந்திருந்த 
போதிலும் மூடியிருந்த 
       போதிலும் அவனே 
அனைத்துமாய்
      நிறைந்திருந்தான்!  என்  
அழியாத பேரன்பை 
     உணராது அழியும் 
தேகத்தில் கவனம் வைத்து 
      அவன் குடியிருந்த என்
இதயத்தை சுக்குநூறாய்
        உடைத்துவிட்டு கவலை
 இல்லாமல் கடமையாற்ற
         சென்றுவிட்டான்
 இதயத்தை உடைத்த என்
          செல்லமே! என் காதல்
 காவலனே! உன் இதயமும்
         இரும்பானதோ! 
என்மேல்  உண்மையான  
     அன்பு  செலுத்த மாட்டாயா 
 காயப்பட்ட மனதிற்கு 
        ஆறுதலாய் அன்பாய்
 அணைக்க மாட்டாயா 
       வேரின்றி  மரமில்லை
  மூச்சு இல்லையேல் 
       உயிரில்லை - அன்பே 
  நீயே என் மூச்சுக் காற்று 
       நீயில்லையேல் நானும்
  இல்லை என் உயிரே !

பதிவு : sooriyasuresh
நாள் : 5-Dec-19, 8:15 pm

மேலே