எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

---------------------சிறந்த கேள்வி இன்டெரெஸ்ட்டிங் பதில் ----------------19 .1 ....

                                        ---------------------சிறந்த கேள்வி இன்டெரெஸ்ட்டிங்  பதில் ----------------19.1. 20   கவின் சாரலன் • நேற்று 9:37 amஏன் சொல்லக் கூடாது ?
ஆறு கால் உள்ள வண்டை ஆறுகாலி என்று சொல்லலாம் பாதாரவிந்தத்தின் மகரந்ததத்தில் புகுந்துரையும்
ஷட் சரணதாம் வண்டாக எனது ஆன்மா ஆகட்டும் என்று சங்கரர் சௌந்தர்யா லஹரி துதியில் சொல்வார் .
இதை ஆறுகால் வண்டாக அல்லது ஆறுகாலி வண்டாக என்று தமிழில் சொல்லலாம் .
எட்டுக்கால் பூச்சி நமது வீட்டுச் சுவரில் இங்குமங்கும் ஓடி ஒட்டடையில் ஊஞ்சலாடும் . ஓடுகாலி எட்டுக்காலியே
ஒட்டடைக் குச்சியால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று பயமுறுத்தலாம் .
வீட்டுக்குத் தெரியாமல் ஓடிவிடும் பெண்களை ஓடுகாலி என்பார்கள்.
ஒவ்வொரு கட்சியாக மாறும் அரசியல் வாதிகளை அரசியல் ஓடுகாலி என்று சொல்லாம் .
வங்கிக்கு நாட்டுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடுபவர்களையும் ஓடுகாலிகள் என்று சொல்லலாம் . இவர்களை ஆங்கிலத்தில் FUGITIVES என்று சொல்வார்கள் .
அவன் ஒரு காலிப் பயல் என்று சொன்னால் பொருளே வேறு .

எட்டுக்கு காலிக்கு ஒரு தத்துவார்த்தமான விளக்கம் :

மனிதர் போய்விட்டார் . காலில்லா கட்டிலில் கிடத்துகிறார்கள்
எட்டு மனிதக் கால்கள் பெறுகிறது கட்டில் . புறப்படுகிறது இறுதிப் பயணம்.
அந்த EIGHT LEGGED BENCH ஐ எண்கால் கட்டிலை எட்டுக்காலி என்று சொல்லலாமா ?

முக்காலி நாற்காலி அறுகாலி வண்டு
எண்காலி எட்டுக்கால்பூச்சி எண்கால் பாடை
ஓடுகாலிகளோ சமூக அரசியலில் குறைவோ
காலிகள் எத்தனை காலிகளடி இங்கே
காளிநீ ஒருத்தி தானடி தாயே ! 

-----கவிச் சகோ மெய்யன் நடராஜ்  முக்காலி நாற்காலி போல் அறுகாலி எண்காலி 
ஏன் சொல்லக்கூடாது என்று கேட்டிருந்தார் . எனது இன்டெரெஸ்ட்டிங் பதில் இங்கே 
உங்களுக்காகவும் ....... 

நாள் : 19-Jan-20, 9:26 am

மேலே