பொங்கிடு தமிழா புலியாக தமிழ்மொழியினை தள்ளிவைத்து வேற்றுமொழி மோகங்கொண்டு...
பொங்கிடு தமிழா புலியாக
தமிழ்மொழியினை தள்ளிவைத்து
வேற்றுமொழி மோகங்கொண்டு
நாகரீக போர்வை போர்த்தி
நடமாடும் தமிழனை...
செந்தமிழை பேசிடும்
செல்லக்குழந்தையினை வையும்
செருக்கு பெற்றோரை
காண்கையில்
குடியரசு நாளினையும்
சுதந்திர நாளினையும்
மறந்தே திரிந்திடும்
மனிதனெனும் மாஇடரை...
தமிழ்தாய் வாழ்த்தினை
தேசியகீதத்தை அவமதிக்கும்
அகக்கொண்ட தமிழனை....
தமிழ்மொழி நசுக்கும்
தனிமனிதனை நீ
கண்டிட்டால் அவனின்
கன்னத்தில் அறைந்திடு..
பெட்டியினில் உறங்கும்
பாம்பாய் இராது
பொங்கிடு! தமிழா
புலியாய்!
புலியாய் புறப்பட்டு
புயலாய் சீற்றத்தோடு
புவியினரை மாற்றிடு
பைந்தமிழை காத்திடு!
பா.கலைமகள்
விழுப்புரம்.